- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சனையை தீர்க்கும் தீர்த்தம்

கடன் பிரச்சனையை தீர்க்கும் தீர்த்தம்

- Advertisement -

மார்கழி மாதம் என்றதும் பலவிதமான விசேஷங்கள் நிறைந்த நாட்கள் நம் நினைவிற்கு வரும். அந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் வைகுண்ட ஏகாதசி. சொர்க்கவாசல் திறக்கக்கூடிய நாளாக இந்த நாள் திகழ்கிறது. மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை தான் வைகுண்ட ஏகாதசி என்று நாம் கொண்டாடுகிறோம். அதே மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து இந்த ஒரு தீர்த்தத்தை வீட்டில் தெளிப்பவர்களுக்கு அவர்களை கஷ்டப்படுத்தும் பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும். அந்த தீர்த்தத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் பிரச்சனையை தீர்க்கும் தீர்த்தம்

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்கள் தரக்கூடிய பிரச்சனைகள் என்று பல இருக்கும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வுகள் இருக்கும். அந்த தீர்வுகளை தருவதற்கு முதலில் நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் இருக்க வேண்டும். ஒருவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அவரிடம் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த எதிர்மறை ஆற்றலை மாற்றி நேர்மறை ஆற்றலாக கொண்டு வந்தால் தான் நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைத்தாலும் அதனால் நமக்கு முழு பலன் ஏற்படும் என்று கூறலாம். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தேய்பிறை ஏகாதசி வருகிறது. அன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் என்பதால் அது பெருமாளுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் மாலை 6 மணிக்கு மேல் பெருமாளை நினைத்துக் கொண்டு இந்த ஒரு தீத்தத்தை தயார் செய்து நம் வீட்டில் நாம் தெளிக்கும் பொழுது பெருமாளின் அருளால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.

இதற்கு ஒரு செம்பு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு துளசி இலைகளை போட வேண்டும். அடுத்ததாக பச்சைக் கற்பூரத்தை போட வேண்டும். பச்சை கற்பூரம் நன்றாக தண்ணீரில் கரைந்த பிறகு இதை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். குறிப்பாக வீட்டு நிலை வாசலிலும், பூஜை அறையிலும் நன்றாக தெளிக்க வேண்டும். மற்ற அறைகளில் இருக்கக்கூடிய மூலைகளிலும் கதவுகளின் பின்புறங்களிலும் இதை நாம் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தெளிப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும். அந்த நேர்மறை ஆற்றலின் விளைவால் நமக்கு கஷ்டங்களை தரக்கூடிய பிரச்சனைகளான கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடினமான கஷ்டங்கள் விலக முருகன் தேங்காய் பரிகாரம்

இந்த தீர்த்தத்தை முழுமனதோடு யார் ஒருவர் தங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தயார் செய்து வீட்டில் தெளிக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது நிதர்சனமான உண்மை. முழு மனதுடன் முயற்சி செய்து அதற்குரிய பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்