- Advertisement -
சமையல் குறிப்புகள்

நாவில் எச்சில் ஊரும் சுவையில் இருக்கும், இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. இதனை ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்வீர்கள்

- Advertisement -

உடைத்த முட்டை குழம்பு  இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குழம்பு உடைத்து வீற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த   சுவையான உடைத்து ஊற்றி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 4, சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு, பச்சை  மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,கொத்தமல்லி தழை – சிறிதளவு, தக்காளி – 2, உப்பு – 1 ஸ்பூன், மஞ்சள்  தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 2 ஸ்பூன், கரம்  மசாலா – 1/2 ஸ்பூன், துருவிய தேங்காய் – 3 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு பேனில் 3  ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் சோம்பு,  கருவேப்பிலை சிறிதளவு,  4 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். சோம்பு, கருவேப்பிலை, ஆகியவை பொரிந்த பிறகு, 2  பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம்  ஓரளவு வதங்கியதும் 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். பின்னர் இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் அரைத்து  சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கி சுருண்டு வந்தவுடன், 1  ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1/2  ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பின்னர்,  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும். இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.4 முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும். மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு லேசாக கிளறி விட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -