- Advertisement -

வருமான தடையை சரி செய்யும் அருகம்புல் பரிகாரம்

- Advertisement -

கூடுதலாக வருமானம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. எப்போதும் வரும், வருமானத்தில் தடை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஒரு நிம்மதியை பெறலாம். சில குடும்பங்களில் எல்லாம் ஒரு மாதம் சம்பளம் வரும், அடுத்த மாதம் சம்பளம் வராது. வியாபாரத்தில் ஒரு மாதம் லாபம் கிடைக்கும். அடுத்த மாதம் இரட்டுக்கு மடங்கு நஷ்டத்தை உண்டு பண்ணிவிடும்.

அப்படி இல்லை என்றால் வந்த வருமானம் வீணாக மருத்துவமனை கோவையின் விரைய செலவுக்கு போய்விடும். ஒரு நன்மை கூட சம்பாதிக்கும் பணத்தால் கிடைக்காது. வருமானத்தில் தடை தடை தடை. வந்த வருமானத்தையும் சேமிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். இப்படி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பணம் வருவதில் உள்ள தடைகள் விலக வேண்டும் என்றால், ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு எளிய தாந்திரீக பரிகாரம் உள்ளது.

- Advertisement -

அதை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு பத்து ரூபாய் கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். விநாயகர் மேல இருக்கும் அந்த அருகம்புல்லை, கொஞ்சமாக குருக்களிடம் கேட்டு, உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கொண்டுவந்த அருகம்புள்ளை எந்த இடத்தில் வைக்க போகிறீர்கள். அதுதான் சூட்சமமே அடங்கியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருக்கும் வருமான தடை விலக வேண்டுமா. வருமானம் மேலும் மேலும் உயர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

- Advertisement -

எவ்வளவு பெரிய தடையையும் உடைக்கக்கூடிய சக்தி கொண்ட, இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் அருகம்புல். நவகிரகங்களின் சூழ்ச்சியை உடைக்க கூடிய சக்தி இதற்கு இருக்கிறது. இதனால் தான் இந்த அருகம்புல்லை உலகத்தின் நாயகனாக திகழும் விநாயகருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். எவ்வளவு பெரிய தீயாய் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனையையும் தணிக்க கூடிய சக்தி இந்த அருகம்புல்லுக்கு இருக்கிறது.

ஒருமுறை அனலானசுரனை விழுங்கிவிட்டு அனலாய் கொதித்துக் கொண்டிருந்த விநாயகரை, தனிப்பதற்கு தேவர்கள் இந்த அருகம்புல்லை தான் பயன்படுத்தினார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் விநாயகரின் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் அடக்க முடியவில்லை. கொஞ்சம் அருகம்புல்லை கொண்டு போய் விநாயகர் தலையில் கொட்டிய உடனே விநாயகர் அமைதி அடைந்தார் என்பது நம்முடைய இந்து புராணங்களில் இருக்கும் நம்பிக்கை. இதே போல தான் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் நம் வீட்டு பிரச்சனைகளையும் தணிக்க கூடிய சக்தி இந்த அருகம் புல்லுக்கு இருக்கு.

- Advertisement -

அருகம்புல் பரிகாரம்

இந்த சக்தியை முழுமையாக நாம் எப்படி பெறுவது. விநாயகர் பாதத்தில் இருந்தோ, தலைமையில் இருந்தோ, கோவிலில் இருந்து இரண்டு அருகம் புல் வாங்கிக் கொள்ளுங்கள். அதை நேராக கொண்டு வந்து ஒரு கண்ணாடி பவுல் அல்லது பீங்கான் பவுலில் போட்டு நீங்கள் சமைப்பதற்கு உப்பு பயன்படுத்துவீர்கள் அல்லவா, அதற்கு மேலே இந்த அருகம்புல்லை வைத்து விடுங்கள்.

அருகம்புல்லை நேராக கொண்டு வந்து உப்பு ஜாடியில் போட்டாலும் தவறு கிடையாது. ஒரு கிண்ணத்தில் போட்டு கல் உப்பு மேலே இந்த அருகம்புல்லை வைத்தாலும் தவறு கிடையாது. அருகம்புல் வைத்த;இந்த உப்பை பயன்படுத்தி சமைத்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். விநாயகரின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

வீட்டில் முன்னேற்றத்தில் வருமானத்தில் இருக்கக்கூடிய தடைகளும் அகலும். இது எவ்வளவு சுலபமான பரிகாரம் ஆனால் எவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் என்பது உங்களுக்கு எப்போது புரியும். தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை செய்யும் போது தான் இந்த பரிகாரத்தைக் பின்னால் மறைந்திருக்கும் சக்தியை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம்

வீட்டில் உங்களுடைய பிள்ளைகள் இருந்தாலும் சரி, கணவர் இருந்தாலும் சரி அல்லது குடும்ப தலைவியே கோவிலுக்கு செல்ல முடியும் என்றாலும் சரி விநாயகர் கோவிலில் இருந்து அருகம்புல்லை தினம் தினம் எடுத்து வந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பழைய அருகம்புல்லை கால்படாத மண் பாங்கான இடத்தில் போட்டுவிட்டு புது அருகம் புல் வைக்க வேண்டும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -