படிப்படியாக உங்களுடைய கடன் சுமை உங்களை விட்டு விலகி செல்ல, செய்ய வேண்டிய எளிமையான ஒரு உப்பு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குலதெய்வத்தை நினைத்து, மகாலட்சுமியை நினைத்து, வாங்கி வந்த கல் உப்பை குறிப்பிட்ட இந்த நேரத்தில், இந்த இடத்தில் வைத்து, வேண்டுதல் வைத்தாலே போதும். உங்களுடைய ஒட்டுமொத்த கடனும் அடையும். முழு நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு.
கடன் அடைக்கும் கல் உப்பு பரிகாரம்
முதலில் இதற்கு நமக்கு கல் உப்பு தேவை. சாதாரண கல் உப்பு. மல்லிகை கடைகளில் கிடைக்கும். கல் உப்பை பணம் கொடுத்து செவ்வாய்க்கிழமை காலை வாங்கிக் கொள்ளவும். வாங்கி வந்த புது கல் உப்பில்தான் பரிகாரத்தை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 மணியிலிருந்து 1:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்தால் தான் அபரிவிதமான பலன் உடனடியாக கிடைக்கும்.
இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட இந்த நேரத்தில் குளிகை நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் செவ்வாய் ஹோரையும் இருக்கிறது. கடன் குறைய பரிகாரம் செய்வதற்கு அதி சக்தி வாய்ந்த நேரம் இது.
இப்போது பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தாம்பூல தட்டை எடுத்து அதில் கல் உப்பை பரப்பிக் கொள்ள வேண்டும். அந்த கல் உப்பில் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது, அந்த கடன் தொகையை உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் எழுதிக் கொள்ள வேண்டும்.
அந்த கல்லுப்புக்கு மேலே உள்ளங்கைகளை வைத்து “மகாலட்சுமி தாயே என்னுடைய கடன் சுமை படிப்படியாக குறைய வேண்டும்” என்று மனமுருகி பிரார்த்தனை செய்து இந்த கல்லுப்பை அப்படியே ஒரு மண் குடுவையில் கொட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் அல்லது பூஜை அலமாரியில் இந்த குடுவையை வடக்கு திசையில் வச்சிருங்க வடக்கு குபேரருக்கு உரிய திசை. இவ்வளவுதான் பரிகாரம்.
10 நாள் அந்த கல் உப்பு பூஜை அறையில் இருக்கட்டும். தினமும் ஊதுபத்தி ஏற்றி அந்த கல்லுப்புக்கு காண்பித்து, கடன் சுமை குறைய வேண்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் மனம் உருக இறைவனிடம் வையுங்கள். குலதெய்வத்திடம் சொல்லுங்கள். அடுத்த செவ்வாய்க்கிழமை அந்த கல்லுப்பை எடுத்து உங்களுடைய உள்ளங்கைகளில் கொட்டி நல்ல தண்ணீரில் கரைத்து, அதை சிங்கிலோ அல்லது மண் பாங்கான இடத்திலோ கொட்டி விட வேண்டும்.
மீண்டும் செவ்வாய்க்கிழமை கல்லுப்பு வாங்கிட்டு வந்து, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை தோறும் செய்ய படிப்படியாக உங்கள் கடன் குறைவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: காரிய தடையை நீக்கி வெற்றியைத் தரும் பரிகாரம்
3 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்களுடைய கடன்பாரம் குறைவதை நீங்கள் உணர்வீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விடுவாள். உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைப்பாள். கோடி கோடியாக லட்சம் லட்சமாக பணம் கடன் வாங்கி இருப்பவர்கள் கூட இதை செய்யலாம் மிகக் குறைந்த அளவு கடன் வாங்கி இருப்பவர்களும் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.