- Advertisement -

சிவன் கோவிலை அடைந்த உடன் “சிவாய நாம” என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு அவரிடம், “நந்தி தேவரே நான் சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன். எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன்” என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும். நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது. நந்தி காயத்ரி மந்திரத்தை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.

 

- Advertisement -

ஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேஷ ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவர் இல்லை.

 

அம்பாளை வணங்கிய பின்னர் தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது. தட்சிணாமூர்த்தி மந்திரத்தை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்..

அதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாத சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, இந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வளம் வருவது நல்லது. வளம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வளம் வரலாம்.

- Advertisement -