சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்

Sivan

சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் ‘எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்’ என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும் இவர் திகழ்கிறார். சித்தராகவும் இவர் அறியப்படுகிறார். இப்படி பல சிறப்புக்கள் பெற்ற நந்தி தேவரை சிவன் கோவிலில் மட்டுமே நாம் பெரும்பாலும் காண இயலும். இவரை வணங்குகையில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் பயனாக பல அறிய பலன்களை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.

nandhi

நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்:
பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை நித்தமும் வணங்குவதன் பலனாக என்னை காத்து என் மனதை தூய்மை படுத்த வேண்டுகிறேன்.

நந்தீஸ்வரரை வணங்கும் நேரத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்.

- Advertisement -

நந்தி வழிபாடு

சிவபெருமானின் வாகனமாகவும், சேவகனாகவும் இருப்பவர் நந்தி பகவான். சிவன் கோயிலில் சிவபெருமான், அம்பாளை வழிபடுவதற்கு முன்பாக அவர்களுக்கு காவலனாக இருக்கும் நந்தி பகவானை வணங்கி சிவபெருமானை வணங்குவதே முறையாகும். தமிழ் சித்தர் பரம்பரையில் நந்தீசர் என்கிற பெயர் கொண்ட சித்தர் சிவபெருமானின் சேவகனான நந்தி பகவான் தான் என பலரும் கருதுகின்றனர். எப்படி இருந்தாலும் நந்தி பகவானை வழிபடுவதால் சிவன் மற்றும் பார்வதியின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கும்.

Nandhi

நந்தி வழிபாட்டிற்குரிய தினங்கள்

பொதுவாக சிவன் கோவிலில் சிவனை வழிபடும் போது நந்தி பகவானையும் வழிபடுகின்றனர். நந்தி பகவானை விசேஷமாக வழிபடும் ஒரு தினமாக மாதந்தோறும் வருகின்ற பிரதோஷங்கள் இருக்கின்றன. இத்தினத்தில் பிரதோஷ நேரத்தில் சிவன் கோயிலில் சோமசூக்த பிரதட்சணம் வலம் வந்து, சிவனையும் நன்றியும் வழிபட்டு நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, அரிசியில் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து, பால், தேன் மஞ்சள் ஆகியவற்றை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து, வாசம் மிக்க மலர்களின் மாலை சாற்றி, பிரதோஷ நேரத்தில் நந்தி பகவான் சன்னிதியில் இருந்து சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் நேரத்தில் நந்தி பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வணங்குவதால் நாம் வேண்டிய அனைத்தும் வாழ்வில் கிடைக்க நந்தி பகவான் அருள் புரிவார்.

nandhi

நந்தி வழிபாடு பயன்கள்

பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோவிலில் நந்தி பகவானை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நமது குல சாபங்கள் தீரும். மனதில் எழும் தீய எண்ணங்கள் அறவே நீங்குகின்றன. நமக்கும் சக மனிதர்களுக்கும் இடையே பகை ஏற்படாமல் காக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு அமைகிறது. நீண்ட நாட்களாக கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் தேற வழிவகுக்கிறது. வறுமை நிலை ஏற்படாமல் காக்கிறது. ஆன்மீக ஞானம் பெருகுகிறது.

இதையும் படிக்கலாமே:
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Nandi gayatri mantra in Tamil. It is also called as Gayathiri manthiram in Tamil.