கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

thatchinamoorthy-manthiram

இந்த பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்தே ஆகா வேண்டும் என்பது விதி. ஆனால் நமது முன்னோர்களின் கூற்றுப்படி விதியை மதியால் வெல்ல முடியும். மதி என்னும் சொல்ல சந்திரனையும் நமது அறிவையுமே குறிக்க கூடிய ஒன்றாகும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்று இருந்தால் மதியை கொண்டு விதியை வெல்ல முடியும் என்பது நியதி.

guru

சந்திரன் பலம் குறைவாக உள்ள ஜாதகக்காரர் எப்படி விதியை வெல்ல முடியும் என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. மதியை(சந்திரனை) தன் தலையில் சூடிய இறைவனை வணங்குவதன் பயனாக நமது கர்ம வினைகள் நீங்கும். பிறை சூடிய பெருமானான சிவனை தீவிரமாக வழிபடுபவர்களுக்கு மனதளவில் பல சோதனைகள் வரும். அவை அனைத்தும் மனதை பக்குவப்படுத்தவே. அந்த சோதனைகளை கடக்க நாம் சிவாம்சமான தட்சிணாமூர்த்தியையும் பைரவரையும் வணங்குவது அவசியமாகிறது. இவர்களின் துணை இன்றி சிவ வழிபாடு அவ்வளவு எளிதில் முழுமை பெறாது.

சிவபெருமானின் யோகா வடிவமாக காட்சி அளிக்கும் ஞானகுருவான தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் கூறவேண்டிய மந்திரம் இதோ.

மந்திரம் :
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”

வியாழக்கிழமை அன்று சிவன் கோயிலிற்கு சென்று மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் மேலே உள்ள மந்திரத்தை 21 முறை ஜபிப்பது நல்லது. அதன் பிறகு இரவு ஒன்பது மணிக்கு முன்பாக வீட்டில் இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்த பின் தினம் தோறும் 27 , 54 , 108 என்ற எண்ணிக்கையில் ஏதோ ஒரு எணிக்கையில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பணம் சேர வெள்ளிக்கிழமை அன்று கூற வேண்டிய லட்சுமி மந்திரம்

இந்த மந்திரத்தை ஜபிக்க பெரிதாக கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அசைவம் உண்ணாமல் இருந்து தட்சிணாமூர்த்தியை மனதில் நிறுத்தி தொடர்ந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் போதும் நமது கர்ம வினைகள் நீங்கும், வாழ்வில் பல வளங்கள் வந்து சேரும், ஞானம் பெருகும்.