- Advertisement -
சமையல் குறிப்புகள்

சட்னி அரைக்க இனி தேங்காய் வேண்டாம். தேங்காய் இல்லாமல் 10 நிமிடத்தில் வித்தியாசமான புதிய 2 சட்னி ரெசிபி உங்களுக்காக!

சிலபேர் தேங்காயை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். தேங்காய் சேர்க்காமல் சுலபமாக சொல்லப்பட்டுள்ள 2 சட்னி வகைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நேரடியாகவே குறிப்புக்கு சென்று விடலாம். இப்போது நாம் முதலில் பார்க்கப் போவது வேர்கடலை சட்னி. இந்த வேர்கடலை சட்னியை, நிறைய பேர் தேங்காய் சேர்த்து தான் அரைபார்கள். தேங்காய் சேர்க்காமலும் சுவையாக அரைக்க முடியும். அது எப்படி?

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடு ஆன பின்பு, 1 கப் அளவு வறுத்த வேர்கடலையை அதில் போட்டுக் கொள்ள வேண்டும். 30 வினாடிகள் அந்த வேர்கடலை நன்றாக சூடு ஆன பின்பு வேர்க்கடலையில் உள்ள தோலை உரித்து விடவேண்டும். இரண்டாவதாக, 1/2 கப் அளவு பொட்டுக்கடலையையும் அந்த கடாயில் சேர்த்து லேசாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும். இப்போது இதை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆரிய வேர்க்கடலையையும், பொட்டுக்கடலையையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.  மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் – 4, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, தேவையான அளவு உப்பு, ஜீரணத்திற்கு இஞ்சி வாசம் பிடித்தவர்கள் சிறிய துண்டு இஞ்சி வைத்துக்கொள்ளலாம். இஞ்சியின் வாசம் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம். (வேர்க்கடலை – 1 கப், பொட்டுக்கடலை – 1/2 கப், பச்சை மிளகாய் – 4, ஒரு சிறிய துண்டு – இஞ்சி, உப்பு, புளி மொத்தமாக 6 பொருட்கள்.)

இப்போது முதலில் எல்லாப் பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அதன் பின்பு தேவையான அளவு தண்ணீரை விட்டு, ஸ்மூத்தாக சட்னி பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். இப்போது தனியான பாத்திரத்தில் சட்னியை மாற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். சிறிய கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய் தாளித்து போட்டால் சூப்பர் சட்னி தயார்.

- Advertisement -

தேங்காய் சேர்க்காமல் 2வது சட்னி ரெசிபி:
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொண்டு, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 4 போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த 3 பொருட்களும் சிவந்தவுடன் சிறிய துண்டு – இஞ்சி, பூண்டு பல் – 4, பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, தக்காளிப்பழம் – 2 பொடியாக நறுக்கியது, சிறிய துண்டு – புளி, இவைகளைப் போட்டு நன்றாக வதக்கி, இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் மாற்றி, தாளிப்பு போட்டால் சூப்பரான சட்னி தயார்.

தக்காளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கவேண்டும். முதலில் போட்டிருக்கும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை சிவக்க வருக்கு வேண்டும். அப்போதுதான் சட்னியின் சுவை சூப்பராக இருக்கும். இந்த 2 சட்னி ரெசிபியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
மங்கலான பழைய துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள் கூட பளபளப்பாக மின்னும். உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் பாத்திரத்தை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -