மங்கலான பழைய துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள் கூட பளபளப்பாக மின்னும். உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் பாத்திரத்தை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள்.

steal-vessels

சிலருடைய வீட்டில் இருக்கும் உப்புத்தண்ணீர் காரணமாக எவர்சில்வர் பாத்திரங்கள் புள்ளி புள்ளியாக, கருப்பு நிறத்தில்  துருப்பிடிக்க ஆரம்பிக்கும். அதேபோல் உப்பு பூத்து வெள்ளை நிறம் படிந்து, அந்த பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதனுடைய வண்ணம் மாறி மங்கி இருக்கும். மங்கலான துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்களை எப்படி சுலபமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

steal-vessels1

பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் எல்லா பாத்திரங்களும் துருப்பிடித்து அழுகாக இருக்காது. ஏதோ ஒரு சில பாத்திரங்கள் மட்டும்தான் அப்படி இருக்கும் அல்லவா? அந்த ஒரு பாத்திரத்திற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி சுத்தம் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

முதலில் ஒரு பெரிய பேஷனில் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப் ஏதாவது ஒன்றை போட்டு நன்றாகக் கரைக்க வேண்டும். கொதிக்கிற தண்ணீரில் கையை விட்டு விடாதீர்கள். ஒரு கரண்டியை விட்டு நன்றாக கலந்து விடுங்கள். சோப்பு நன்றாக கரையட்டும். முடிந்தவரை லிக்விட் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சீக்கிரமே கரைந்துவிடும். ஏனென்றால், சுடுதண்ணீர் ஆறுவதற்கு முன்பாக, உங்களுடைய எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து அந்த சோப்பு கலந்த தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட வேண்டும்.

steal-vessels2

10 லிருந்து 15 நிமிடங்கள் அந்த பாத்திரம் சோப்பு கலந்த சுடு தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும். அதன் பின்பு பாத்திரங்களை வெளியே எடுத்து சாதாரண நாரை போட்டு, தேய்க்க வேண்டும். அப்போது அதில் இருக்கும் அழுக்கு முழுமையாக வெளியேறிவிடும். அதன் பின்பு அந்த பாத்திரத்தில் இருக்கும் ஈரம் போகும் வரை உலர வைத்தும் கொள்ளலாம். அல்லது துணி போட்டு துடைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இறுதியாக கொஞ்சமாக வினிகரை ஸ்கிரபில் தொட்டு, சுடு தண்ணீரில் கழுவி வைத்திருக்கும் பாத்திரத்தின் மேல் தடவ வேண்டும். இந்த வினிகரானது பாத்திரத்தில் 5 நிமிடங்கள் ஊறட்டும். அதன் பின்பு சாதாரண ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து உங்கள் பாத்திரங்களை கழுவி பாருங்கள். மங்கிய நிறமானது நிச்சயம் பளபளப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

steal-vessels3

இந்த பொங்கலுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்தார்கள் என்று எல்லோரும் கேட்கும் அளவிற்கு உங்கள் வீட்டு சமையல் அறை  பளபளக்கும் என்றால் பாருங்களேன்! வீட்டிலிருக்கும் நாம் பயன்படுத்தும் பழைய பாத்திரங்களை இந்த முறையில் சுத்தப்படுத்தி பளபளப்பாக மாற்றி அலமாரியில் அடுக்கி வைத்து பாருங்கள். பார்ப்பதற்கே மன நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
தீராத கடன் தீர, கட்டுக்கட்டாக பணம் சேமிப்பில் இருக்க, வீண் விரயம் குறைய, உங்கள் வீட்டு உப்பு ஜாடியில் இந்த 1 பொருள் இருந்தால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.