ஆன்மீகத்தில் 1 ரூபாய்க்கு இருக்கும் மகத்துவத்தை நீங்கள் அறிவீர்களா? பல கோடிக்கு அதிபதியாக மாற்றும் 1 ரூபாய் நாணயத்தை இப்படி மட்டும் தெரியாமல் கூட செய்யாதீர்கள்!

coins-kuberan

பொதுவாக பணத்தை விட நாணயங்களுக்கு அதீத சக்தி இருப்பதாக பழங்காலம் முதல் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. மொய் பணம் வைக்கும் பொழுது நூறு ரூபாய்க்கு இருக்கும் மதிப்பை விட 101 என்று கொடுக்கும் பொழுது தான் அதன் மதிப்பு அதிகம். அந்த ஒரு ரூபாயை தேடி அப்போது அலையும் பொழுது தான் அதன் மதிப்பு நமக்கு புரிந்திருக்கும். அத்தகைய மகத்துவம் நிறைந்த ஒரு ரூபாய் நாணயம் பற்றி ஆன்மீகம் கூறும் அதிர வைக்கும் உண்மைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

coins

நாணயங்கள் மகாலக்ஷ்மியின் ஸ்வரூபமாக பார்க்கப்படுவதால் நாணயங்களை அங்கும் இங்கும் சிதற விடக்கூடாது என்று கூறப்படுகிறது. வீட்டில், கடை, தொழில் ஸ்தாபனங்கள் இப்படியாக எந்த இடங்களிலும் நாணயங்களை ஆங்காங்கே குப்பை போல போட்டு வைத்திருக்க கூடாது. அப்படி போட்டு வைத்தால் அந்த இடத்தில் பணம் சேர்வது தடைபடும். நீங்கள் பணம் வைத்திருக்கும் இடங்களிலெல்லாம் கட்டாயம் ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து வைக்க வேண்டும்.

ஒரு ரூபாய் நாணயம் இருக்கும் இடங்களில் எல்லாம் பணமானது வீண் விரயம் ஆகாமல் மென்மேலும் சேரும் என்பது நம்பிக்கை. மணிபர்ஸ், கல்லாப்பெட்டி, அஞ்சறைப்பெட்டி, பீரோ ஆகிய பணம் வைக்கும் இடங்களில் எல்லாம் பணத்துடன் சேர்த்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்து பாருங்கள். உங்கள் பணம் பன்மடங்கு பெருகும். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எப்பொழுதும் செலவு செய்து விடக்கூடாது.

one-rupee0

புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள், புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுபவர்கள், ஒரு நல்ல காரியத்திற்கு வெளியில் செல்பவர்கள், காரிய வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு ராசியான நபர்களின் கையால் ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொண்டு செல்லுங்கள். நினைத்தது தடைகள் அன்றி அப்படியே நடக்கும். வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமிக்கு ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்டு அர்ச்சனை செய்து பாருங்கள்.

- Advertisement -

108 ஒரு ரூபாய் நாணயங்களை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதனை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெள்ளியன்றும் அதிலிருந்து நாணயங்களை எடுத்து மகாலட்சுமிக்கு ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை ஒவ்வொரு முறை உச்சரித்துக் கொண்டே, ஒவ்வொரு நாணயங்களாக அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்து வரும் பொழுது வீட்டில் பண கஷ்டம் என்பதே ஏற்படாது.

coins

தீராத கஷ்டம் வரும் பொழுது இறைவனிடம் உங்கள் குறைகளை வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வையுங்கள். உங்களுடை ய வேண்டுதல் நிறைவேறிய பின் அதனை எடுத்து உண்டியலில் காணிக்கையாக செலுத்துங்கள். இது காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்துவரும் எளிய பரிகார முறை ஆகும். இப்படி செய்யும் பொழுது எப்படிபட்ட கஷ்டமான சூழ்நிலையும் மாறி துன்பம் தொலையும் என்பது நம்முடைய நம்பிக்கை.

cash-box

சில்லரை நாணயங்களின் சப்தம் பணத்தை மென்மேலும் பெருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. வீட்டில் நாணயங்களை போட்டு வைக்க மரத்தாலான பெட்டியை பயன்படுத்துங்கள். அந்த பெட்டியை வடக்கு திசையில் வைத்து கிழக்கு நோக்கியபடி நீங்கள் பணத்தை எடுக்கும் படி அமையுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதில் இருந்த சில்லரை நாணயங்களை எண்ணுகின்ற சப்தத்தை வீட்டில் வரவழையுங்கள்.
counting-coins

நாணயங்களை எண்ணும் சப்தம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை வெளியில் போக விடாமல் செய்யும். கோவில்களில் நாணயங்களை என்னும் சப்தம் கேட்கும் பொழுது அக்கோவிலில் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி வந்த பலரும் கோடீஸ்வரனாக மாறிய கதையும் உண்டு. இப்படியாக ஒரு ரூபாய் நாணயம் ஆன்மீகத்தில் வகிக்கும் பங்கு வியப்பிற்கு உரியதாக இருந்து வருகிறது. எனவே ஒரு ரூபாய் நாணயத்திற்கு மதிப்பளித்து அதனை போற்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.