ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – 2019

Rahu ketu peyarchi palangal

மேஷம் (Rahu Ketu Peyarchi 2019 Mesham):
Mesham Rasi

எதிலும் சிந்தித்து செயல்படும் மேஷம் ராசியினருக்கு 13.02.2019 ஆம் அன்று நிகழ விருக்கின்ற ராகு – கேது கிரக பெயர்ச்சிகளால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும் சூழலை ஏற்படுத்துகிறது. இந்த ராகு – கேது பெயர்ச்சியால் உங்களுக்கு வந்து சேர வேண்டிய கொடுக்கல்- வாங்கல், கடன் தொகை அசல், வட்டியுடன்சேரும் வந்து சேரும். உடலாரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய அளவு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தாது.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சீக்கிரம் திருமணம் நடக்கும். பணியில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஊதிய உயர்வு பதவி உயர்வுகள் போன்றவை கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் அமோகமாக இருக்கும். புதிய தொழில், வியாபார விரிவாக்கம் செய்வதோடு, புதிய வாடிக்கையாளர்களும் கிடைக்க பெறுவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் நேர்மையாக செயல்பட்டால் மக்களின் நன்மதிப்புகளை பெற முடியும்.

ஆண்டின் பிற்பகுதியில் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெற்று மிகுந்த லாபங்களை பெறுவார்கள். கலைதொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். அதனால் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க முடியும். பெண்களுக்கு புதிய பொன் ஆபரணம், ஆடைகளின் சேர்க்கை உண்டாகும். மாணவ – மாணவிகள் கல்வியில் சிறந்த சாதனைகளை செய்வார்கள்.

ரிஷபம் (Rahu Ketu Peyarchi 2019 Rishabam):
Rishabam Rasi

தங்களை மற்றவர்கள் பார்வைக்கு சிறப்பாக அலங்கரித்து கொள்ளும் அக்கறை கொண்ட ரிஷபம் ராசியினருக்கு 13.02.2019 ஆம் அன்று நிகழ விருக்கின்ற ராகு – கேது கிரக பெயர்ச்சிகளால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைவுகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

தம்பதியர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் பூர்வீக சொத்து விடயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்தது சாதகமான பதில்களை பெறுவீர்கள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அரசியலில் இருப்பவர்கள் அனைத்து விடயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வருடத்தின் முற்பகுதியில் விவசாயிகள் சற்று கஷ்டப்பட்டாலும், ஆண்டின் இறுதியில் விவசாயத்தில் நல்ல லாபங்கள் பெற்று வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைப்பார்கள்.

கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெற்றாலும் அவ்வப்போது, வீண் விரயங்களை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் அமையப்பெற்று திருமணம் நடக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் செய்வார்கள்.

மிதுனம் (Rahu Ketu Peyarchi 2019 Mithunam):
midhunam

காரியங்களை மிக எளிதாக சாதித்து கொள்ளும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு 13.02.2019 அன்று நிகழ உள்ள ராகு – கேது கிரகங்களின் பெயர்ச்சி சாதக பாதக பலன்கள் நிறைந்ததாகவே இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற – இறக்கமாகவே இருக்கும். பிறருக்கு கடன் தருவதை தவிர்க்க வேண்டும். அதீத உடலுழைப்பை மேற்கொள்வதால் அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். பெரிய நோய் பாதிப்புகள் ஏதும் இருக்காது.

உறவினர்களிடம் அனுசரித்து செல்வதால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுப காரியங்கள் பல தடை, தாமதங்களுக்கு பிறகு நடக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்றன வேலையை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரங்களில் புதிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. அரசாங்க வழியில் எதிர்பார்த்த பொருள் உதவி நீண்ட தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் கவனமுடன் பேசுவது அவசியம். இந்த ஆண்டு ஏற்படும் குரு பகவான் பெயர்ச்சிக்கு பிறகு விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிறந்த பலன்கள் ஏற்படும். கலைஞர்கள் தங்களின் வாய்ப்புகளுக்காக கடுமையான போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று தீவிர முயற்சி மேற்கொள்வதால் கல்வி விடயங்களில் சிறக்க முடியும்.

கடகம் (Rahu Ketu Peyarchi 2019 Kadagam):
Kadagam Rasi

எதிலும் சிந்தித்து செயல்படும் திறன் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 அன்று நிகழ உள்ள ராகு – கேது கிரகங்களின் பெயர்ச்சியால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். தாராள பணவரவு இருப்பதால் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவி ஒற்றுமை கூடும். புதிய அசையும், அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும்.

நீண்ட நாட்களாக முயற்சித்த வெளியூர், வெளிநாடு பணிகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த பதவி, ஊதிய உயர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் விருத்தி ஆவதோடு மிகுந்த லாபங்களும் கிடைக்கும். தொழில் கூட்டளிகளின் ஒத்துழைப்பு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கொடுத்த கடன்கள் யாவும் உங்களிடம் மீண்டும் வந்து சேரும். அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

விவசாயிகள் விளைபொருட்களுக்கான நியாயமான விலைகள் கிடைக்க பெறுவார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை ஈட்டும் வாய்ப்புகளை பெறுவார்கள். பெண்களுக்கு தாய் வழியில் வர வேண்டிய சொத்துகள் வகையில் லாபம் ஏற்படும். கெட்ட நடத்தை உள்ள மாணவர்களிடம் இருந்து விலகி மாணவர்கள் கல்வியை ஆர்வமுடன் பயின்று சாதனைகள் செய்வர்.

சிம்மம் (Rahu Ketu Peyarchi 2019 Simmam):
simmam

வாழ்வில் மிக சிறந்த லட்சியங்களை நோக்கி பயணிக்கும் சிம்ம ராசிக்காரர்கள் வருகிற 13.02.2019 அன்று நிகழ இருக்கின்ற ராகு – கேது கிரக பெயர்ச்சியால் சம அளவிலான பலன்களை பெறும் அமைப்பு ஏற்படுகிறது. பணவரவு தாராளமாக இருக்கும். பிறருக்கு கடன், முன் ஜாமின் போன்றவற்றை தருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். சிலருக்கு புது வீடு, வாகனம் யோகங்கள் ஏற்படும். குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உடன் பணி புரியும் பணியாளர்கள் உங்களின் பணி சுமையை பகிர்ந்து கொள்வார்கள். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றியடையும். ஒரு சிலர் புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகுந்த லாபங்கள் கிடைக்கும். அரசாங்கம், வெளிநாடுகள் தொடர்பான தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மக்களின் நன்மதிப்பை பெறும் வகையிலான பணிகளை பொதுவாழ்வில் இருப்போர்கள் செய்வீர்கள்.
- Advertisement -

பயிர்கள் செழிப்பாக வ வளர்ந்து விவசாயிகளுக்கு நல்ல லாபங்களை தரும். பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும் காலம் என்பதால் கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வது நல்லது. குடும்ப பெண்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு ஏற்பட்டு நீங்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ – மாணவியர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சியினை பெறுவார்கள்.

கன்னி (Rahu Ketu Peyarchi 2019 Kanni):
Kanni Rasi

தங்களின் சிறந்த அறிவாற்றலை கொண்டு பல விடயங்களை சாதிக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு வருகின்ற 13.02.2019 அன்று நிகழவிருக்கின்ற ராகு – கேது கிரக பெயர்ச்சியால் சமமான பலன்களை பெறும் நிலை ஏற்படுகிறது. உடலாரோக்கியத்தில் அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல்களால் மனம் மற்றும் உடற்சோர்வு ஏற்படும். பணவரவு பெரியளவில் இல்லாவிட்டாலும், வரவுக்கு குறைவிருக்காது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

உறவினர்கள், நண்பர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். உத்தியோகிஸ்தர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை சிறிது தடங்கல்களுக்கு பிறகு கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான நிலையே இருக்கும். ஆனாலும் புதிய தொழில் ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். பிறருடனான பணம் கொடுக்கல் – வாங்கல்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் சிறிது சோதனையான விடயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.

பயிர்கள், கால்நடைகள் மூலமாக விவசாயிகளுக்கு ஓரளவு லாபங்கள் இருக்கும். அராசாங்க மானியங்கள் கிடைக்க சிறிது தாமதம் ஆகும். கிடைக்கின்ற வாய்ப்புகளை கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்வதால் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். பெண்களுக்கு சிறிய அளவிலான வீண் விரயச் செலவுகள் இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தேவையற்ற கவன சிதறல்களை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த வெற்றிகளை பெறலாம்.

துலாம் (Rahu Ketu Peyarchi 2019 Thulam):
Thulam Rasi

பிறரை வசீகரிக்கும் முகம் மற்றும் உடலமைப்பை கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 நிகழவிருக்கின்ற ராகு – கேது கிரக பெயர்ச்சியால் மேற்கொள்கின்ற அனைத்து வகையான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பொருள் வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் உங்களின் மதிப்பு பெருகும். புத்தாடைகள், பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும். பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள் சிலர் கிடைக்க பெறுவீர்கள். சிலர் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
- Advertisement -

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள், கட்சி தலைவர்களால் கௌரவிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி, வங்கி கடன் உதவி போன்றவை தகுந்த சமயங்களில் கிடைக்கும். விளைச்சல் சிறப்பாக இருக்கும். மிகுந்த பொருள், புகழ் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு தாராள பொருள்வரவும், சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டும் மகிழும் வாய்ப்புகள் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்வர்.

விருச்சிகம் (Rahu Ketu Peyarchi 2019 Virichigam):
virichigam

எதையும் துல்லியமாக கணக்கிடும் திறன் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 அன்று நிகழவிருக்கின்ற ராகு – கேது பெயர்ச்சியால் உடல் நலம் அவ்வப்போது பாதிப்படைந்து குணமடையும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய நிலை இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். கொடுத்த கடன் தொகைகள் நீண்ட இழுவைக்கு பின்பு வட்டியுடன் திரும்ப கிடைக்கும். பணவரவு சுமாராக தான் இருக்கும் என்பதால் வீண் செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் எதிலும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரங்களில் சிறிது காலம் மந்த நிலை நிலவினாலும், பொருள் வரவிற்கு குறைவேதும் இருக்காது. அரசியல் துறையில் இருப்பவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவீர்கள். பதவிகளும் கிடைக்கும். வருடத்தின் முற்பகுதியில் விவசாயிகளுக்கு பொருளாதார நிலையில் சில கஷ்டங்கள் ஏற்பட்டாலும் வருடத்தின் இறுதியில் சிறந்த பலன்களை பெற முடியும். வெளிநாடுகளுக்கு சென்று பொருள், புகழ் ஈட்டும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பாரா உதவிகள் தக்க சமயங்களில் கிடைக்கும். கல்வியில் மந்த நிலை ஏற்படும் சூழல் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கூடுதலான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்த பலன்களை தரும்.

தனுசு (Rahu Ketu Peyarchi 2019 Dhanusu):
Dhanusu Rasi

அனைத்து விடயங்களை பற்றிய ஞானமும், எதிலும் தைரியமாக முடிவெடுக்கும் திறன் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 அன்று நிகழவிருக்கிற ராகு – கேது கிரகங்களின் பெயர்ச்சியால் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். கொடுத்த கடன்களை சீக்கிரத்தில் வசூல் செய்ய முடியாத நிலை இருக்கும். அதீத அலைச்சல், தேவையற்ற பயணங்களால் உடலில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் சற்று அனுசரித்து செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

பணியிடங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கான பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமாகும். தொழில்,வியாபாரங்களில் ஏற்ற இறக்கமான சூழலே இருக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்க்கும் காரியங்கள் தாமதம் ஆகும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நல்லது. நீதிமன்ற வழக்குகளில் தாமதம் இருந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசியல் வாழ்வில் இருபவர்களுக்கு நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை இருக்கும். கட்சி சம்பந்தமாக அதிக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
- Advertisement -

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு சற்று பாதிப்புகள் இருக்கும். வீண் செலவுகள் தவிர்த்து, கிடைக்கின்ற வாய்ப்புகளை கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். பொருள் வரவு தேவைக்கேற்ற படி இருக்கும். விளையாட்டு போட்டிகள், தேர்வுகள் ஆகியவற்றில் மாணவர்கள் சிறப்பான சாதனைகள் செய்வார்கள்.

மகரம் (Rahu Ketu Peyarchi 2019 Magaram):
Magaram rasi

வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு வரும் 13.02.2019 அன்று நிகழவிருக்கிற ராகு – கேது கிரக பெயர்ச்சியால் பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். உடல் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாறுதல்கள் கிடைக்கும். தள்ளி போன பதவி, ஊதிய உயர்வுகள் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடுகள் செல்லும் யோகம் ஏற்படும். அதிகம் பயணங்களை மேற்கொள்வீர்கள். சிலர் கோயில் சம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டு தெய்வங்களின் அருளை பெறுவீர்கள். வேலை தேடும் நபர்கள் சற்று தாமதத்திற்கு பிறகு விரும்பிய வேலை கிடைக்க பெறுவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கி உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படுவதோடு, தொழில்களை மேன்மேலும் விரிவடைய செய்யும் யோகம் அமையும். பதவி, புகழ் கிடைக்கும் யோகம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஏற்படும்.

விவசாயிகள் விவசாயத்தில் போட்ட பணத்தை எடுத்து விட முடியும். பொருள்வரவு அதிகம் ஏற்படுவதால் கலைஞர்கள் வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உற்றார், உறவினர்களின் வீட்டு விஷேஷங்களில் பெண்கள் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பதோடு அரசாங்கத்தின் உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.

கும்பம் (Rahu Ketu Peyarchi 2019 Kumbam):
Kumbam Rasi

எந்த ஒரு விடயத்தையும் பரபரப்பின்றி செய்து வெற்றி காணும் கும்பம் ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 அன்று நிகழ்விருக்கிற ராகு – கேது பெயர்ச்சியால் குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பொருள் வரவிற்கு பங்கம் ஏற்படாது. திருமணம், குழந்தை பேறு ஆகியவை சிலருக்கு ஏற்படும். உடலாரோக்கியம் சிறிது பாதிப்படைந்து பிறகு சரியாகும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று மிகுந்த தனவரவு உண்டாகும். சமூகத்தில் பெரிய இடத்து மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் புகழ், பதவி போன்றவற்றை கிடைக்க பெறுவார்கள். மக்கள் செல்வாக்கு உண்டாகும்.
- Advertisement -

விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு விளைபொருட்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். விவசாய கடன்கள் அனைத்தையும் அடைக்க முடியும். புது புது வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைத்த வண்ணம் இருக்கும் என்பதால் அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்வது நல்லது. பெண்களுக்கு உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறந்த வீட்டு பூர்வீக சொத்துகள் கிடைக்க பெறுவார்கள். மாணவ – மாணவிகள் ஆசிரியரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மேலும் கல்வியில் சாதனைகள் செய்து பெற்றோர்களை மகிழ்விப்பார்கள்.

மீனம் (Rahu Ketu Peyarchi 2019 Meenam):
meenam

எப்போதும் பிறருக்கு உதவும் குணமும், எண்ணமும் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு வருகிற 13.02.2019 அன்று நிகழ இருக்கிற ராகு – கேது கிரக பெயர்ச்சியால் கொடுக்கல் – வாங்கல், தனவரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், பண விவகாரங்களில் பிறரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். பதவி, ஊதிய உயர்வுகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரங்கள் எந்த வித தடங்கல்கள் இன்றி சிறப்பாக நடைபெறும். வேலையாட்கள் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அரசியல் துறையில் இருப்பவர்கள் தங்களின் பேச்சு, நடத்தை ஆகியவற்றில் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

சிறப்பாக விளைச்சல் ஏற்பட்டு விவசாயிகள் நல்ல லாபங்களை பெறுவார்கள். அரசாங்கத்திடமிருந்து கடன்கள் கிடைக்க பெறும்.குடும்ப பெண்கள் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. கிடைப்பது சிறிய வாய்ப்புகள் என்றாலும் அதை பயன்படுத்திக்கொள்வதால் கலைஞர்கள் பண கஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாம். கல்வியில் மந்த நிலை ஏற்படும் காலம் என்பதை மாணவ – மாணவிகள் கவன சிதறல்களை தவிர்த்து கல்வியில் முழு கவனம் செலுத்துவதால் சிறப்பான பலன்களை பெற முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Here we have Rahu Ketu peyarchi 2019 palangal in Tamil for mesham, Rishabam, Mithunam, Kadagam, Simmam, Kanni, Thulam, Virichigam, Dhanusu, Magaram, Kumbam and Meenam rasi.