பல்லி நம் தலையில் விழுந்தால் உண்மையில் என்ன பலன் ?

lizardl

பல்லி என்பது ஒரு ஊர்வன வகை விலங்காகும். பல்லிகள் பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் காணப்படுகின்றன ஒரு உயிரினமாகும். நமது வீட்டிற்குள்ளாக வரும் கொசு, நச்சு தன்மை கொண்ட பூச்சிகளை தின்று நமக்கு நன்மையை செய்யும் ஒரு தெய்வீக விலங்கு பல்லியாகும். நமது புராணங்களிலும் பல்லி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் ஒரு நபரை படாதபாடு படுத்தும் என்பது அனுபவ வாக்கு. அத்தகைய பல்லி நமது உடலின் மீது விழுவது தோஷமாக கருதப்படுகிறது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதையும், அப்படி பல்லி விழுவதால் ஏற்படும் தோஷத்தை போக்கும் பரிகாரம் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாவார். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடும் வட இந்தியாவில் தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. வீட்டில் தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் அதிகம்.

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தாள் என்ன பலன்

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்

தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

- Advertisement -

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி

நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி

வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

 

முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை

முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்

கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்

பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

lizard

கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்

கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை

மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி

lizard

மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

lizard

காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்

மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.

lizard

இதனாலேயே ஊர்வன வகையான உயிரினங்களில் ஒலியை எழுப்பும் சிறப்பு சக்தியை பல்லிக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளார். பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன.

பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினாள் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் இதனாலேயே. அதுபோல பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும் தனி பலன்கள் உண்டு.

lizard

பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் இதன் சிறப்பை பாருங்கள். அது தான் கௌளி சாஸ்திரம்.

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

Srirangam Ranganathaswamy temple

பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

varadharaja perumal

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது. சிவபெருமானுக்குரிய ம்ரித்யுன்ஜெய மந்திரத்தை ஜெபிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

deepam

சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. பசுமாட்டின் உடலில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்பதால் பசுமாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்குகிறது.

Today Gold rate

வசதி மிகுந்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேலும் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலான பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம். மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும்.

English Overview

Palli vizhum palan or Palli vilum palan

Palli vilum palangal is nothing but the prediction based on lizard falling on different parts of the body. Here we will see the prediction.

Lizard falls on head ( Palli thalaiyil vizunthaal ) – If lizards falls on right side of head then we will get sorrow. If lizard falls of left side of head then there will be a unnecessary worry caused by some one in family or in work place. In Tamil it is called as Kalagam.

Lizard falls on leg ( palli kaalil vizhunthaal ) – If lizards falls on left thigh then there will be unnecessary worry. In Tamil it is called as Sanjalam

Lizard falls on stomach ( palli vayitril vizhunthaal ) – If lizard falls on left side of stomach then it will create happiness. If the lizard falls on right side of the stomach then it will crease grains( Thaaniyam ).

Lizard falls on eye ( palli kannil vizhunthaal ) -If lizard falls of left eye then it will create fear. If lizards falls on right eye then it will create good feel.

Lizard falls on ears ( palli kaathil vizhunthaal ) – If lizard falls of left side of ears then it will increase profit. If lizard falls on right side of ears then it will increase life span.

Lizard on nails ( palli nakaththil vizhunthaal ) – If lizard falls on left side of nail then it will create some loss. If lizard falls on right side of nail then it will increase unnecessary expense.

Lizard falls on chest ( palli nenjchil vilundhaal ) – If lizard falls on left side of chest then it will create good feel. If lizard falls on right side of chest then it will increase profit.

Lizard falls on back ( palli muthukil vilundhaal) – If lizard falls on left side of back body then it will create sorry. If lizard falls on right side of back body then it will create loss.

Lizard falls on lips or mouth( palli vaayil, uthattil vilundhaal ) – If lizard falls on left side of lips or mouth then it will create worry. If lizard falls on right side of lips or mouth then it make money inflow.

Lizard falls on nose ( palli mookkil vilundhaal ) – If lizard falls on left side of nose then it will create worry. If lizard falls on right side of nose then it will bring disease.

Lizard falls on shoulder ( palli tholil vizhundhaal ) – If Lizard falls on shoulder then it will create success.

Lizard falls on neck ( palli kazhuthil vizhundhaal ) – If lizard falls on left side of neck then it will create success. If lizard falls on right side of neck then it will increase enemy.

Lizard falls on hand ( palli kaiyil vizhundhaal ) – If lizard falls on hand then it will create sorry.

Balli vilum palanagal or palli vilum palangal is predicted based on the balli or palli panjangam. Most of the Hindus believe balli panjankkam.