- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த தேங்காய் சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். திரும்பி...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த தேங்காய் சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். திரும்பி வரும் பொழுது அவர்களின் லஞ்ச் பாக்ஸில் ஒரு சாதம் கூட மீதம் இருக்காது

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கின்றனர். அதிலும் பல தாய்மார்கள் அதிக அளவில் காய்கறிகளை வைத்து செய்யும் உணவுகளையே மதிய உணவிற்கு செய்து கொடுப்பார்கள். அதுபோல காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு குறைந்த அளவு காரத்துடன் மிகவும் சுவையான உணவு செய்து கொடுத்தால் மட்டுமே அன்றைக்கு உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதும் காரம் குறைவாகவும் இருக்கக் கூடிய ஒரு உணவு என்றால் அது தேங்காய் சாதம் தான். தேங்காய் சாதத்தை தேங்காய் பால் எடுத்தும் செய்யலாம். அப்படியில்லாமல் அவசரத்திற்கு தேங்காயைத் துருவி சேர்த்தும் தேங்காய் சாதம் செய்யலாம். இவ்வாறு தேங்காயை துருவி சேர்த்து செய்யக்கூடிய தேங்காய் சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, வெள்ளை சாதம் – 2 கப், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எப்பொழுதும் போல சாதம் வடித்து, தேங்காய் சாதத்திற்கு தேவையான 2 கப் சாதத்தை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை மூடி தேங்காயை காய் துருவலை பயன்படுத்தி பொடியாகத் துருவி வைக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் இரண்டாக கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பின்னர் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

தேங்காய் நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்துள்ள 2 கப் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். 5 நிமிடத்திற்கு அடுப்பை சிம்மில் வைத்து, இவ்வாறு கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் சாதம் நொடிப்பொழுதில் தயாராகிவிட்டது.

சற்று முன்