எதை தேய்த்தாலும் பொடுகு பிரச்சனை போகலையா? அப்போ இத மட்டும் செஞ்சு பாருங்க! உடனே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

podugu-dandruff
- Advertisement -

நம் மண்டை ஓட்டு பகுதியின் இறந்த செல்கள் செதில் செதிலாக உதிர்வதை தான் நாம் பொடுகு என்று அழைக்கிறோம். இது சிறியவர், பெரியவர் என்று பாராமல் அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதிக்கிறது. பொடுகு பிரச்சனை எதனால் வருகிறது தெரியுமா? எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு மண்டையோட்டில் சுரக்கும் அதிகப் படியான எண்ணெய் காரணமாகவும், தலையை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தினாலும், தலைக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது மற்ற அழகு சாதனங்கள் கூட பொடுகு உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதனை நிரந்தரமாக சரிசெய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படி பயன்படுத்துவது? என்பது தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

டிப்ஸ் 1:
நல்லெண்ணெயுடன் சம அளவிற்கு எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை கூந்தலின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவி ஊறவிட்டு ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு தொல்லை தீரும்.

- Advertisement -

டிப்ஸ் 2:
தயிரை ஒரு கப் அளவிற்கு எடுத்து அதில் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வாரமிருமுறை தலையில் தடவி அலசினால் கூந்தல் பட்டுப் போல மின்னும். கண்டிஷனர் போட்டது போல் இருக்கும். பொடுகு தொல்லையும் தீரும். மிளகு தூள் சேர்ப்பதால் குளிர்ச்சி ஏற்படாமல் உஷ்ணம் உடலை பாதுகாக்கும்.

curd

டிப்ஸ் 3:
தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவிற்கு பதிலாக முந்தைய நாள் ஊற வைத்த வெந்தயத்தை வடித்து விட்டு அந்த தண்ணீரில் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் போல் செய்தால் நுரை வரும். அதையே ஷாம்புவாக பயன்படுத்தி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசினால் பொடுகு வராமல் இருக்கும். பொடுகுத் தொல்லை அதிகம் இருப்பவர்கள் ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் தரும்.

- Advertisement -

டிப்ஸ் 4:
கிரீன் டீ குடிப்பவர்கள் அந்த டீயில் சர்க்கரை சேர்க்காமல் வெறும் தேனீரில் துளசி இலைச்சாறு மற்றும் நெல்லி பொடி கலந்து அரை மணி நேரம் தலை முழுவதும் மசாஜ் செய்து தலையை அலசினால் பொடுகு முழுவதும் நீங்கி விடும்.

டிப்ஸ் 5:
பொடுகு தொல்லை நீங்க முட்டையின் மஞ்சள் கரு சிறந்த பலனை அளிக்கும். மஞ்சள் கருவை உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் கூந்தல் எவ்வளவு வறண்டு இருந்தாலும் மென்மையாக மாறிவிடும். பொடுகுத் தொல்லை வரவே வராது. முட்டையின் நாற்றம் பிடிக்காதவர்கள் ஷாம்பூ போட்டு மூன்று முறை அலசி விடுங்கள்.

- Advertisement -

டிப்ஸ் 6:
அதிக பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் கால் டீஸ்பூன் கிராம்பு தூளுடன், 4 ஸ்பூன் தேன் கலந்து அதனுடன் பத்து பல் இடித்த பூண்டு சேர்த்து நன்கு மசித்து பொடுகு இருக்கும் மண்டை ஓட்டுப் பகுதியில் நன்கு அழுத்தி தேய்த்து மசாஜ் செய்தால் பொடுகு உடனே நீங்கிவிடும்.

டிப்ஸ் 7:
பொடுகு, பேன் தொல்லைகள் இல்லாமல் இருக்க வேப்ப இலைகளை விழுதாக அரைத்து லேசாக தலை முழுவதும் தடவி உடனே அலசி விடுவது மிகவும் நல்லது. அதன் கசப்புத்தன்மை தலையில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். எனினும் வேப்பிலை உஷ்ணத் தன்மை கொண்டுள்ளதால் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். நீங்கள் குளிக்கும் பொழுது அந்த நீரில் வேப்ப இலைகளைப் போட்டு குளித்தால் மிகவும் நல்லது.

vepilai

டிப்ஸ் 8:
இரவில் இஞ்சி சாறு மற்றும் பீட்ரூட் சாறு சிறிதளவு எடுத்து தலை முழுவதும் மசாஜ் செய்து மறுநாள் காலையில் தலையை அலசினால் ஒரு வாரத்தில் பொடுகு பிரச்சனை வெகுவாக குறைந்து விடும்.

ginger 3-compressed

டிப்ஸ் 9:
ஆப்பிளை தோல் சீவி விட்டு நன்கு மசித்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து மண்டையோட்டு பகுதியில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசினால் தலையில் இருக்கும் பூஞ்சை கிருமிகள் ஒழிந்து பொடுகு நீங்கிவிடும்.

katralai

டிப்ஸ் 10:
கற்றாழை ஷாம்புகளை உபயோகிக்கலாம் அல்லது கற்றாழை ஜெல்லை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு பேஸ்ட் போல் செய்து தலை பகுதி முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து அலசினால் பட்டுப்போல் கூந்தலும் பொடுகுப் பிரச்சினையும் தீரும்.

இதையும் படிக்கலாமே
முடி கொட்டாமல் இருக்க தலைக்கு எதுவும் தடவாதிங்க! 10 நாள் இத குடிச்சாலே போதும்!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -