செல்வம் தரும் குபேரன் போற்றி

Kuberan-1
- Advertisement -

பணம் அல்லது செல்வம் இன்றைய உலகத்தில் எல்லாவற்றிற்கும் அவசியமாகிறது. கடுமையாக உழைத்து மிகுந்த செல்வதை ஈட்டினால் குபேரனை போன்று செல்வந்தனாக வாழலாம் என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகின்றனர். ஆனால் அப்படி சம்பாதிக்கும் எல்லோருக்கும் வீண் பொருள் விரயங்கள் ஏற்படாமல் இருந்து பணத்தின் சேமிப்பு அதிகம் உயர்ந்தால் செல்வந்தனாக முடியும். எனவே செல்வ கடவுளான குபேரனை போற்றி இயற்றப்பட்ட இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபட, நமது செல்வ நிலை உயரும்.

guberan

குபேரன் 108 போற்றி

1.அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி

- Advertisement -

11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி

21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி

- Advertisement -

Kuberan

31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி

41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி

- Advertisement -

51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி

61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி

guberan

71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி

81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி

91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி

guberan

101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
108 குபேரா போற்றி போற்றி

செல்வத்தின் அதிபதியான “ஸ்ரீ குபேரனை” போற்றி இயற்றப்பட்டது இந்த 108 துதிகள். மகாலட்சுமி வழிபாட்டிற்குரிய வெள்ளிக்கிழமைகளில் காலை 9.00 மணிக்குள்ளாகவும் மாலை 5.00 லிருந்து 6.30 மணிக்குள்ளாகவும் உங்கள் பூஜையறையில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி மற்றும் பத்திகள் கொளுத்தி, குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து இந்த 108 போற்றி துதிகளை படிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளியன்றும் செய்து வர உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது. உங்களின் சேமிப்பு அதிகரித்து செல்வந்தனாக வாழ குபேரமூர்த்தி அருள் புரிவார்.

kuberan

நமது நாட்டின் புராணங்களில் செல்வத்திற்கு அதிபதி “குபேரன்” என கூறப்பட்டுள்ளது. இந்து மதம் என்றில்லை புத்தம் மற்றும் ஜைன மதங்களிலும் குபேரன் செல்வ கடவுளாக அறியப்பட்டு வணங்கப்படுகிறார். நமது மதத்தின் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு விலங்கு வாகனமாக இருக்கிறது. ஆனால் குபேரமூர்த்தியோ எப்போதும் பணத்தை தேடி அலையும் மனிதனையே தனது வாகனமாக கொண்டிருப்பதாக சில புராண நூல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட குபேரனை இத்துதிகளை கொண்டு வழிபடுவதால், ஒருவருக்குரிய உரிய செல்வ வளத்தை வழங்குவார் ஸ்ரீ குபேரமூர்த்தி.

இதையும் படிக்கலாமே:
நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தரும் யட்சிணி மந்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், ஸ்லோகங்கள் என அபிலாவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 108 Kubera mantra in Tamil or Kuberan 108 potri in Tamil. This mantra is also called as Kubera 108 mantra in Tamil. One can get wealth by chanting this kubera mantra in Tamil.

- Advertisement -