இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்குமே இந்த கடன் பிரச்சனை தலைக்கு மேல் நின்று கொண்டு, தலை பாரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிம்மதியாக ஒரு மனிதனை வாழ விடாமல் தடுக்கும் சக்தி, கடன். அந்த கடன் சுமையை குறைப்பதற்கு சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்தம்.
கார்த்திகை மாதத்தில் இன்றைய தினம் வந்திருக்கக் கூடிய மைத்திரேய முகூர்த்தத்தில், நம்முடைய கடனை எப்படி திருப்பிக் கொடுத்தால், கடன் சுமை குறையும்? கடனை திருப்பிக் கொடுப்பதற்கு முன்பு சொல்ல வேண்டிய முருகர் மந்திரம் என்ன? ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
11-12-2024 மைத்ரேய முகூர்த்த பரிகாரம்.
முருகனை மனதில் வணங்கி இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம். 11-12-2024 புதன்கிழமை இன்று மதியம் 2:38 மணி முதல் 4:20 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் ஆனது இருக்கிறது. குறிப்பிட்ட இந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய கடன் தொகையிலிருந்து, ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்தாலும், அந்தக் கடனானது சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கை.
உதாரணத்திற்கு வங்கியில் இருந்து 1 லட்சம் கடன் வாங்கி இருக்கிறீர்கள். அதில் 1000 ரூபாயோ, 10,000 ரூபாயோ உங்கள் கையில் இருக்கும், ஒரு சிறு தொகையை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் திருப்பி கட்டினால், அந்த ஒரு லட்ச ரூபாய் கடனையும் சீக்கிரம் அடைக்க முடியும் என்பது நம்பிக்கை.
தனி நபரிடம் வட்டிக்கு கடன் வாங்கி வைத்துள்ளீர்கள். யாரிடம் கைநீட்டி கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபரிடம் நீங்கள் வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை இன்று திருப்பிக் கொடுத்து விட்டால், அந்த கடன் முழுவதும் சீக்கிரம் அடைந்து விடும். ஆனால் கடன் கொடுத்தவர்கள், ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, 1000 ரூபாயை திருப்பிக் கொடுத்தால் நிச்சயம் வாங்க மாட்டார்கள் என்றால் என்ன செய்வது?
ஒரு வெள்ளை கவர் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கவருக்குள் அந்த ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு அலமாரியில் வைத்து விடுவோம். இப்படி செய்தாலும், நிச்சயம் திருப்பி அடைக்க முடியாத கடனை, சீக்கிரம் திருப்பிக் கொடுக்கும் யோகம் உங்களைத் தேடி வரும்.
சரி, இது கார்த்திகை மாதம் அல்லவா. முருகப்பெருமானுக்கு உகந்த மாதம். முருகப்பெருமான் பணப் பிரச்சனையை தீர்த்து வைப்பதில், கடன் சுமையை குறைப்பதில் வல்லமை வாய்ந்தவர். அவரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 6 முறை சொல்லிவிட்டு, கடனை அடைத்து பாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அற்புதத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்றைய தினம் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு முன்பு சொல்ல வேண்டிய முருகர் மந்திரம் இதோ உங்களுக்காக.
முருகர் மந்திரம்
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம்
ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ !
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் டிசம்பர் மாதம் மைத்ரேய முகூர்த்த வழிபாடு.
முருகரை நினைத்து, நம்பிக்கையுடன் கடன் சுமையிலிருந்து வெளிவர, இன்று இந்த பரிகாரத்தை செய்வோம். அனைவரும் நல்ல பலனை பெறுவோம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.