- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval11-09-2025 ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

11-09-2025 ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

இன்று 11-09-2025 ஆவணி மாதத்தில் வந்திருக்கக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதி. இன்று மாலை 4:25 மணிக்கு மேலாகத்தான் பஞ்சமி திதி பிறக்கவிருக்கிறது. நாளை மதியம் 2:00 மணி வரை பஞ்சமி திதி இருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சமி வழிபாடு என்றாலே இரவு நேரத்தில் வாராகி அன்னை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.

அந்த வகையில் பார்த்தால் 11-9-2025 வியாழக்கிழமை தினமான இன்று இரவு வாராகியை நினைத்து வீட்டில் வழிபாடு செய்யலாம் அல்லது வாராகி சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்று வியாழக்கிழமையோடு சேர்ந்து இந்த தேய்பிறை பஞ்சமி திதி வந்திருப்பது அதி சிறப்பு. வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் நம்முடைய பண கஷ்டத்தை தீர்த்து வைக்க, வாராகி அன்னையிடம் வேண்டி என்ன பரிகாரம் செய்யலாம்‌. ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

தேய்பிறை பஞ்சமி வாராகி வழிபாடு

இன்று மாலை 7:30 மணிக்கு மேல் இரவு 10:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் எந்த நேரத்தில் செய்தாலும் தவறு கிடையாது. பத்து மணிக்கு மேலாக செய்தாலும் தவறு கிடையாது. எவ்வளவு இருள் இந்த பூமியை சுழ்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு வழிபாட்டில் சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரம்

ஒரு கரு நீல துணி எடுத்துக் கொள்ளுங்கள். காட்டன் துணியாக இருக்கட்டும். அது ஏற்கனவே பயன்படுத்திய துணியாக இருக்கக் கூடாது. புதுசாக லைனிங் துணி இருந்தால் கூட அதிலிருந்து சதுர வடிவில் ஒரு சின்ன துண்டு வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் 1 ஸ்பூன் வெண்கடுகு, 5 மிளகு வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தயார் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே முடிந்து வைத்திருக்கும் அந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, வாராகியை மனம் உருகி வேண்டி பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும்.

வாராகி மந்திரம்

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம !

- Advertisement -

முடிச்சை கையில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு வாராகியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி கையில் இருக்கும் முடிச்சை அகல் விளக்கில் இருக்கும் எண்ணெயில் நனைத்து விடுங்கள். பிறகு அந்த முடிச்சை நெருப்பு கொண்டு பற்ற வைக்க வேண்டும்.

இந்த முடிச்சு உள்ளே இருக்கும் பொருட்களோடு சேர்ந்து நெருப்பில் எரிந்து பஸ்பமாகும் வரை அந்த இடத்திலேயே அமர்ந்து வாராகியை மனதார நினைத்து, கடன் தீரவும் வருமானம் பெருகவும் பிரார்த்தனை வைத்துக் கொள்ள வேண்டும்.

மிளகும் வெண் கடுகும் நெருப்பில் எப்படி வெடித்து சிதறுகிறதோ அதேபோல உங்களுடைய, கடனையும் வெடித்து சிதற வைக்கக்கூடிய வேலையை அந்த அன்னை வாராகிதாய் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: 11-09-2025 இன்று மாலை செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு

தீபம் எரிந்து முடிந்ததும் உள்ளே இருக்கும் பொருட்களை வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இன்று இரவு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் சுமையிலிருந்து விடுபடக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்