- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval12-04-2025 கடன் தீர பௌர்ணமி பரிகாரம்

12-04-2025 கடன் தீர பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

சில நேரத்தில் நாம் கைநீட்டி வாங்கக் கூடிய கடன், நமக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காது. கடன் வாங்கியதும் தெரியாது. திருப்பி அடைவதும் தெரியாது. ஆனால் சில நேரத்தில் நாம் வாங்கும் கடனானது நமக்கு பெரிய பிரச்சினையை கொடுத்து விடும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவும் முடியாமல், கடன் வாங்கியவரிடம் பதில் சொல்லவும் முடியாமல், சில பேர் எல்லாம் ஊரைவிட்டே ஓடிவிடுகிறார்கள்.

கௌரவமாக வாழ்ந்தவர்கள் தலைமறைவாகும் காலமெல்லாம் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலை எல்லாம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனுடைய வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது. தீரா கஷ்டத்தை கொடுக்கும் கடன் சுமையிலிருந்து வெளிவருவதற்கு எளிமையாக ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ள போகின்றோம்.

- Advertisement -

பங்குனி பௌர்ணமி வழிபாடு

நாளைய தினம் 12.4.2025 பங்குனி உத்திர பௌர்ணமி. சொல்லப்போனால் பங்குனி உத்திரமும் பௌர்ணமியும் ஒரே நாளில் தான் வரவேண்டும். இந்த வருடம் மாறி வந்திருக்கிறது. இருப்பினும் இந்த பங்குனி உத்திர பௌர்ணமிக்கு அதீத சக்தி உண்டு. இந்த நாளில் நாம் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல், விரைவாக பலிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பௌர்ணமி அன்று காலையில் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த 2 பொருட்களை சேர்க்க வேண்டும்.

இதே போல பௌர்ணமிக்கு அடுத்தடுத்து வரக்கூடிய 15 நாட்களும் இதே தண்ணீரில் குளிக்க வேண்டும். அதாவது பௌர்ணமிக்கு பிறகு தேய்பிறை தொடங்கி விடும் அல்லவா தேய்பிறை நாள் முழுவதும் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் குளிக்கும் போது தேய்பிறை நிலவு போல என்னுடைய கடன் தேய்ந்து காணாமல் போய்விட வேண்டும் என்று இறைவனிடம் நம்பிக்கையாக வேண்டுதல் வைக்க வேண்டும்.

- Advertisement -

சரி, நாம் குளிக்கும் தண்ணீரில் போட வேண்டிய அந்த இரண்டு பொருட்கள் என்ன. சிவப்பு சந்தனம், குங்குமப்பூ. இந்த இரண்டு பொருட்களை தான் குளிக்கின்ற தண்ணீரில் சேர்க்க வேண்டும். எப்படி தெரியுமா. இரவு தூங்கும் போது ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் சிவப்பு சந்தன பொடி, இரண்டே இரண்டு குங்குமப்பூவை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து ஊற வைத்து விடுங்கள். (இன்று இரவு நீங்கள் இந்த தண்ணீரை தயார் செய்து விட வேண்டும் கவனம்).

மறுநாள் ஊற வைத்திருக்கும் இந்த இரண்டு பொருளையும் அப்படியே, குளிக்கும் தண்ணீரோடு கலந்து, இந்த பௌர்ணமி முதல் நாள் பரிகாரம் செய்யும் போது மட்டும் தலைக்கு குளித்து விடுங்கள். அடுத்தடுத்த நாள் உடம்புக்கு மட்டும் குலித்தாலும் தவறு கிடையாது. கட்டாயம் நாட்டு மருந்து கடைகளில் இந்த இரண்டு பொருட்களை வாங்கி தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

வேறு வழி கிடையாது. ஆனால் நாளை தொடங்கி அடுத்த 15 நாட்கள் இந்த தண்ணீரில் குளிப்பவர்களுக்கு நிச்சயம் கடன் சுமை குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நாளைய தினம் பௌர்ணமி அல்லவா நாளை மாலை உதிக்கின்ற நிலவு பார்த்து வெட்ட வெளியில் அந்த அம்பாளையும், சந்திர பகவானையும் மனமுருக நினைத்து இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

லலிதாம்பிகை மந்திரம்

ஓம் சர்வம் ஸ்ரீ லலிதாம்பிகையே
அர்ப்பணம் அஸ்து
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !

இதையும் படிக்கலாமே: தலையெழுத்து மாற முருகன் மந்திரம்

அம்பாளை மனதார நினைத்து, இந்த மந்திரத்தை பௌர்ணமி நிலவைப் பார்த்து படித்தாலே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் லட்சுமி கடாட்சம் தானாக கிடைத்துவிடும். கடன் சுமையை குறைப்பதற்கு வருமானம் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்