வெற்றிக்குரிய கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு உரிய தேய்பிறை சஷ்டி திதியானது, இன்று 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வேண்டி வணங்கி நீங்கள் செய்யும் வழிபாடு, முழுமையான பலனை பெற்றுத் தரும். வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலக, வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகள் குவிய, இன்றைய தினம் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகார பூஜையை தான், இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
12-10-2025 தேய்பிறை சஷ்டி வழிபாடு
இன்று மாலை 6 மணி அளவில் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். வெற்றிக்குரிய கடவுள் முருகனுக்கு உரிய பொருள் வெற்றிலை. ஒரே ஒரு முழு வெற்றிலை, கிழியாமல் உங்களுக்கு தேவைப்படும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு பிரசாதம் நெய்வேதியமாக வைத்து விடுங்கள்.
ஒரு தாம்பூல தட்டில் இந்த வெற்றிலையை வைக்க வேண்டும். மஞ்சளாலோ அல்லது சந்தனத்தாலோ அந்த வெற்றிலையில் ஸ்டார் கோலம் போடுவோம் அல்லவா, அதே போல அந்த வெற்றிலை கோலம் போட்டு, அந்த கோலத்தின் 6 முனைகளில் குங்குமம் வைத்து, அந்த கோலத்திற்கு நடுவே ஒரு பூ வைத்து இந்த வெற்றிலையை நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குக்கு பக்கத்தில் வைத்துவிட்டு, முருகா என்னுடைய கஷ்டத்தை தீர்த்து வையப்பா, என்ற சொல்லி, உங்களுக்கு தெரிந்த முருகன் பாடலை பாடலாம். உங்கள் பிரச்சனைகளை முருகனிடம் முறையிடலாம்.
முருகன் பாடல் தெரியாது என்றால் கந்த சஷ்டி கவசம் ஒலிக்க விடலாம். கந்த குரு கவசம் ஒலிக்க விடலாம். அல்லது வேல்மாறல் படிக்கலாம் எந்த பாடலாக இருந்தாலும் சரி. எதுவுமே எங்களால் முடியாது என்றால் “ஓம் சரவணபவ” மந்திரத்தை 108 முறை சொல்லி இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பச்சை நிற வெற்றிலை நட்சத்திர கோலத்தின் முன்பு என்ன வேண்டுதல் வைத்தாலும் சரி, அது கூடிய விரைவில் உங்களை வந்து சேரும். அதற்கான வரங்களை முருகன் வாரி வாரி கொடுத்து விடுவான். வழிபாடும் முடிந்தவுடன் மூன்று நாட்கள் அந்த வெற்றிலை பூஜையறையில் இருக்கட்டும். காய்ந்த பிறகு அதை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாடு
இந்த எளிமையான வழிபாடு குறிப்பாக உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, நிலம் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இன்று ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறு பகவானால் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பத்திலிருந்து விடுபட இந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.