இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள்

moon

பௌர்ணமி இரவில் வானில் தோன்றும் சந்திரன், ஜோதிட சாஸ்திரத்தில் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். சூரிய கிரகணம் போலவே சந்திர கிரகணமும் அடிக்கடி ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இன்றிரவு நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் 12 ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் இந்த ராசியினரை மிகவும் உணர்ச்சிவசப்படும் நிலையை அடிக்கடி உண்டாக்கக்கூடும். இதை தடுக்க உங்களின் உடல் மற்றும் மனம் அமைதியாக செய்யும் காரியங்களில் ஈடுபட வேண்டும். மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், நினைவுகள் போன்றவற்றை மறந்து விட வேண்டும்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் மன நிலையில் சிறந்த மாறுதல்களை உண்டாக்கும். உங்கள் குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு பக்க பலமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தினருடனான உறவுகளை மேம்படுத்தி கொள்வதில் உங்களின் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

மிதுனம்:

midhunam

மிதுன ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் மிகுந்த மன ரீதியான அழுத்தங்களை தரலாம். மேலும் உங்களின் சொந்த வாழ்வில் சிலவற்றில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். உங்களின் மன அழுத்தங்கள் நீங்க யோகா, தியானம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவது நல்லது.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் நெருக்கமான உறவுகளுக்குள் பிணக்குகள் ஏற்படும் சூழல் ஏற்படும். ஆண்டு இறுதியில் பொருளாதார ரீதியில் சில சிக்கல்களை உருவாக்கும். பணம் சேமிப்பு, முதலீடு போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படுவதும், உங்கள் நெருக்கமான உறவுகளுக்கான நேரத்தை செலவிடுவதும் அவசியம்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் இவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும். பொருளாதார ரீதியிலான விடயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். உங்கள் மனதிற்கு பிடித்த புதிய ஒரு விடயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த ஆண்டு வாழ்க்கையை மாற்றத்தக்க தீர்மானங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களின் மறைமுக எதிரிகளை உங்களுக்கு காட்டி கொடுக்கும். ஆண்டின் பின்பகுதி உங்களுக்கு நன்மையான பலன்களை தரும். எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்த்து கொள்வதாலும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புகளை அதிகமாக்குகிறது.

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு மன ரீதியாக பல நெருக்கடிகளை கொடுக்கும். பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் உருவாகும். எப்போதும் திறந்த மனநிலை கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.

விருச்சகம்:

Virichigam Rasi

விருச்சிக ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களை சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். எந்த ஒரு விடயத்தையும் சற்று நிதானமாக கையாள்வதாலும், பிறரிடம் கனிவாக நடந்து கொள்வதாலும் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் மிக சிறப்பான பலன்களை தரும். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான முயற்சிகளில் வெற்றிகளையும், காதல் விடயங்களில் மன ஒற்றுமையையும் உருவாக்கும். உங்களுக்கு ஏற்படவிருக்கும் பலன்களை திறந்த மனதோடு ஏற்று கொள்வது சால சிறந்தது.

மகரம்:

Magaram rasi

மகரம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களை பாதுகாப்பற்றவராக உணர செய்யும். நெருக்கமானவர்களை கட்டுப்படுத்தும் ஆதிக்க மனோநிலை அதிகரிக்க கூடும். தேவையற்ற பயங்களை நீங்கள் களைய வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதால் அனைத்து பிரச்சனைகளும் தீருவதற்கான வழி உண்டாகும்.

கும்பம்:
Kumbam Rasi

கும்பம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை உருவாக்கும். இருந்த போதிலும் அவர்களை வெற்றி கொள்ளத்தக்க மனோபலமும், சிந்தனை ஆற்றலும் உங்களுக்கு உருவாகும். உங்களை முழுமையாக நம்பி எத்தகைய காரியங்களிலும் ஈடுபடுவதால் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

மீனம்:

Meenam Rasi

மீனம் ராசியினருக்கு இந்த வருடம் ஏற்படவிருக்கும் சந்திர கிரகணம் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும், தொழில்,வியாபார ரீதியாகவும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவதாலும், உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வதாலும் அனைத்திலும் வெற்றிகளை சுவைக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
சிவனை 12 ராசியினரும் வழிபடும் முறைகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi chandra grahanam in Tamil. It is also called as 12 rasi in Tamil or 12 rasi pariharam in Tamil or 12 rasi jothidam in Tamil.