வாஸ்து படி எந்த நிறங்கள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் தெரியுமா?

astro-flower

ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு நிறம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிக்கு உரியவர்கள் தங்களுக்கு உரிய அதிர்ஷ்ட நிறங்களை அடிக்கடி பார்ப்பதன் மூலம் அல்லது பார்க்கும் படியாக அமைத்துக் கொண்டால் அதிர்ஷ்டமானது உங்கள் வீட்டு கதவை தட்டும். சிலரை ராசி ஆனவர் என்று கூறுவார்கள். உங்கள் ராசிக்குரிய நிறத்தை நீங்கள் பயன்படுத்தினால் நீங்களும் ராசியானவராக அவர்களை போல் மாறிவிடுவீர்கள். அந்த வரிசையில் 12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய வீட்டை சுற்றிலும் ஊதா நிற வர்ண பூக்களை கொண்ட செடிகளை வளர்த்து வந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி தானாகவே வரும். ஊதா நிற ஆடையை அடிக்கடி உடுத்திக் கொண்டால் செல்லும் காரியம் வெற்றியாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் ஆரஞ்சு வர்ண மீன்களை மீன் தொட்டிகளில் போட்டு உங்கள் வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் பார்க்கும்படியான ஒரு இடத்தில் அமைத்து வைத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அடிக்கடி ஆரஞ்சு நிற உடைகளை உடுத்திக் கொள்ளலாம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய ராசிக்கு உரிய நிறமாக இருக்கும் மஞ்சள் வர்ண உடையை காரிய சித்திக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். செல்லும் காரியம் வெற்றி அடைய மஞ்சள் நிற உடையை உடுத்திக் கொண்டு செல்லலாம். மேலும் மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்துவது, நெற்றியில் சந்தனம் இட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் தங்களுடைய ராசிக்கு நீல நிற வர்ணத்தை அடிக்கடி பார்ப்பது அதிர்ஷ்டத்தை தரும். நீல நிற உடைகளை அணிந்து செல்லும்பொழுது காரிய சித்தியாகும். நீல நிற கற்கள் கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது மேலும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் உங்களுடைய ராசிக்கு நீங்கள் சிவப்பு நிற வர்ணத்தை பயன்படுத்துவது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்களாக இருந்தால் சிவப்பு நிற பொட்டு வைப்பது சிவப்பு நிறத்தில் அலங்காரம் செய்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் ராசிக்கு நீங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறி மற்றும் கனிகளை சாப்பிட்டால் நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் வெண்மை நிறத்தை அதிகம் விரும்புவது நல்லது. வெண்மை நிறப் பூக்கள் பூக்கும் தாவரங்கள், வீட்டை சுற்றி வளர்ப்பதும் அதிர்ஷ்டத்தை சேர்க்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்கள் பச்சை நிற வர்ணத்தை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு நீங்கள் பச்சை நிற கைக்குட்டை வைத்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை தரும். மேலும் வீட்டை சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்களை வளர்த்து வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோவென்று உங்கள் வீட்டில் கொட்டும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும் பிங்க் நிற வண்ணத்தை அடிக்கடி பார்ப்பது அதிர்ஷ்டத்தை உண்டாகும். பிங்க் நிறத்தில் பூக்கும் பூக்களை கொண்ட செடிகளை வளர்த்து வருவதும் அதிர்ஷ்டமான அமைப்பை கொடுக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய நிறமாக இருக்கும் அடர் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் பூ தொட்டிகளை வளர்ப்பதும், மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்துவது, குறிப்பாக பொன் அரளி மலர் செடிகளை வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய நிறமாக விளங்கும் காவி நிற வர்ணத்தை அடிக்கடி பயன்படுத்துவது நல்லது. காவி நிறத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவது, காவி நிறம் கொண்ட படங்களை வரைந்து வீட்டில் மாட்டி வைப்பது போன்றவை அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்த உங்கள் ராசிக்கு நீங்கள் மயில் நிறத்தை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மயில் தோகை வைத்துக் கொள்வது மிகவும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். மயில் நிறத்திலிருக்கும் படங்களை வீட்டில் மாட்டி வைப்பதும் அதிர்ஷ்டத்தை தரும். நீல நிற பூக்களைக் கொடுக்கும் செடிகளை வளர்ப்பது யோகத்தை தரும்.

மீனம்
meenam
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு மீன்கள் என்றால் அற்புதமான அதிர்ஷ்டமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் மீன ராசிக்காரர்கள் மீன் தொட்டிகளை அமைத்து, அதில் பல வர்ண நிறங்களால் மீன்களை விட்டு விளையாடுவதும், அதனை பராமரிப்பதும் செய்து வந்தால் திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.