உங்கள் ராசி படி திருமண வாழ்வு சிறப்பாக இருக்க இதை செய்தால் போதும்.

astrology

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். ஆனால் திருமணமான தம்பதிகள் அனைவருமே அவ்வாறு மகிழ்வுடன் வாழ்வதில்லை. பொதுவாக தம்பதிகளுக்குள் சண்டை கருத்துவேறுபாடுகள் அவ்வப்போது ஏற்படுவது தான். ஆனால் சில தம்பதிகளுக்கு இப்பிரச்சினைகள் பெரிதாக மாறி பிரிந்து வாழ்தல், விவாகரத்து போன்ற நிலையில் கொண்டு விடும். இதற்கு அந்த தம்பதிகளின் ஜாதகத்தில் பாதகமான நிலைகளில் கிரகங்கள் பெயர்வதும் ஒரு காரணம். அப்படி அக்கிரகங்களின் பாதகமான நிலையினால் 12 ராசியினருக்கும் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் பரிகாரங்களை பற்றி இங்கு காண்போம்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாயின் பாதகமான தசைகளில் இருந்தால் இந்த ராசியினருக்கு திருமண வாழ்வில் பிரச்சனைகளும், சில சமயம் தம்பதிகள் பிரிந்து வாழும் நிலையும் ஏற்படலாம்.

பரிகாரம் :

இப்பிரச்சினைகள் நீங்குவதற்கு இந்த ராசியின் பாதகமான தசைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஒரு சின்ன குவளையில் நீரை பூஜையறையில் நிவேதனமாக வைத்து விட்டு செல்ல வேண்டும்.மேலும் கருப்பு எள்,உளுந்து போன்றவற்றை கோவில்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.

ரிஷபம் :
Rishabam Rasi
இந்த ராசிக்கு அதிபதியாகிய சுக்கிர பகவானின் பாதகமான தசைக் காலங்களில் தம்பதியினருக்குள் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

பரிகாரம் :

இப்பிரச்சினைகள் நீங்குவதற்கான பரிகாரங்களாக. தம்பதிகளில் ஆண், பெண் யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் வஸ்திரங்களையும், மஞ்சள் நிற இனிப்புகளையும் ஏழைகளுக்கு தானம் அளிக்க உங்கள் இல்லற வாழ்வு சுகப்படும்.

மிதுனம் :
midhunam
பெரும்பாலும் காதல் திருமணம் புரிந்திருக்கும் மிதுன ராசியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் இந்த ராசிக்கு அதிபதியான புதன் பகவானின் பாதகமான காலகட்டமாகும்.

பரிகாரம் :

இந்த ராசியினர் தங்கள் இல்லற வாழ்வின் பிரச்சனைகள் தீர எப்போதும் வெளிர் நிற உடைகளை அணிய வேண்டும்.மேலும் தினமும் காலையில் தங்கள் வீட்டிற்கருகிலுள்ள எறும்பு புத்திற்குச் சென்று அவ்வெறும்புகளுக்கு வெல்லத்தை உணவாக அளிக்க வேண்டும்.

Advertisement

கடகம் :
Kadagam Rasi
சந்திரனுக்கு சொந்த வீடாகிய கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் பாதகமான தசை காலத்தில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக தம்பதிகள் விவாகரத்து வரை கூட செல்ல வேண்டிய நிலை உருவாகும்.

பரிகாரம் :

இனி இவர்கள் தங்கள் வாழ்வில் சந்திரனின் அருள் நிறைந்த வெள்ளை நிற ஆடைகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் கோடைகாலங்களில் மக்களுக்கு குடிநீரை தானமாக அளிக்கலாம்.

சிம்மம் :
simmam
இந்த ராசியின் அதிபதியான சூரியனின் பாதகமான காலத்தில் தம்பதியருக்குள் காராசாரமான வாக்குவாதங்கள் ஏற்படும். ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடும் நிலையையும் ஏற்படுத்தும்.

பரிகாரம் :

இத்தம்பதிகளில் ஒருவரோ அல்லது இருவரும் வெள்ளிக்கிழமைகளில் மஹாவிஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.மேலும் அக்கோவிலிலுள்ள கோமடத்தில் பசுமாடுகளுக்கு அகத்திக்கீரையை உண்ணக்கொடுக்க வேண்டும்.

கன்னி :
Kanni Rasi
கன்னி ராசிக்கு திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு புதன் பகவானின் கெடுதலான தசாக் காலமாகு ம். இதன் காரணமாக தம்பதிகள் இருவரும் மனஸ்தாபம் கொண்டு நீண்ட காலம் தனியாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

பரிகாரம் :

இப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் கோவில்களுக்குச் சென்று வழிபட, பிரிந்த தம்பதிகளை அந்த ஆஞ்சனேயப் பெருமான் கூடிய விரைவில் ஒன்று சேர்த்து மகிழ்வுடன் வாழ வைப்பார்.

துலாம் :
Thulam Rasi
இந்த துலாம் ராசியினருக்கு திருமண வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம் இதை ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின் பாதகமான அமைப்பாகும்.”இல்லற சுகத்திற்கு” அதிபதியான சுக்கிர பகவானின் இத்தகைய காலகட்டத்தில் ஜாதகர் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை நாடி, அதன் காரணமாக அவரின் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும்.

பரிகாரம் :

இவர்கள் தினமும் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு கரைத்து குளிக்க வேண்டும்.மேலும் வியாழக்கிழமைகளில் பசுமாடுகளுக்கு வாழைப்பழங்களை உணவாகக் கொடுக்க வேண்டும்.

விருச்சிகம் :
virichigam
இந்த விருச்சிக ராசியினருக்கு இதன் அதிபதியான செவ்வாய் பகவானின் பாதகமான தசை காலகட்டத்தில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் உண்டாகலாம். இதனால் தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.

பரிகாரம் :

இவர்கள் பிறர் உயிரைக் காக்கக் கூடிய ரத்த தானத்தை வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ கொடுக்கலாம்.மேலும் முருகன் கோவிலில் அம்முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தை சாற்ற வேண்டும்.

தனுசு :
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு அதன் அதிபதியான குரு பகவானின் பாதகமான அமைப்பு காலகட்டத்தில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தோன்றலாம். ஒரு சிலர் வருடக் கணக்கில் பிரிந்து வாழவும் செய்வர்.

பரிகாரம் :

இவர்கள் தங்கள் உடலில் செம்பு வளையமோ அல்லது காப்போ எப்போதும் அணிய வேண்டும். மேலும் எறும்புகளுக்கு வெல்லத்தை உணவாக அளிக்க வேண்டும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மகரம் :
Magaram rasi
மகரத்திற்கு அதிபதியான சனி பகவானின் பாதகமான அமைப்பு மற்றும் தசைக் காலகட்டங்களில் இவர்களின் இல்லற வாழ்வில் பிரச்சனைகள் தோன்றலாம். தம்பதிகளில் சிலரின் நிலை விவாகரத்து வாங்கி பிரியும் நிலை வரை செல்லும்.

பரிகாரம் :

இவர்கள் தங்கள் உடலில் எப்போதும் வெள்ளியிலாலான நகையை அணிந்திருக்க வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் சிவபெருமானை வழிபாடு வர வேண்டும்.

கும்பம் :
Kumbam Rasi
இக்கும்ப ராசியினருக்கு அதன் அதிபதியாகிய சனி பகவானின் கெடுதலான காலகட்டத்தில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் உருவாகும்.

பரிகாரம் :

சனிக்கிழமைகளில் கருப்பு எள் தீபத்தை சனி பகவானின் சந்நிதியில் ஏற்றி வர வேண்டும். மேலும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கருப்பு அல்லது அடர் நீல புதிய ஆடையை தானமாக அளிக்க வேண்டும்.

மீனம் :
meenam
இந்த ராசியின் அதிபதியான குரு பகவானின் கெடுதலான காலகட்டத்தில் இவர்களின் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தோன்றலாம்.

பரிகாரம் :

ஒவ்வொரு பவுர்ணமியில் சிவன் பார்வதி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வர இல்லற வாழ்வின் அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.