Astrology : உங்கள் ராசிப்படி இன்று எங்கு சென்று சிவனை வழிபாட்டால் நன்மை பெருகும் தெரியுமா ?

sivaperuman
- Advertisement -

மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வருகிற ஒரு சிறப்பான தினம் தான் மகா சிவராத்திரி தினம். இந்த தினத்தில் மக்கள் பலரும் பல சிவன் கோயில்களுக்கு சென்று சிவனை வழிபாட்டு அவரின் அருளை பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியில் பிறந்தவர்கள் சிவராத்திரி தினத்தில் எந்தெந்த சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
Mesham Rasi

செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியினர் மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானின் முழுமையான அருளை பெறுவதற்கு திருவண்ணாமலை கோயில் மற்றும் இதர மலை சார்ந்த பகுதிகளில் இருக்கும் சிவன் கோயில்களில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகளை பெறலாம்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

சொகுசு வாழ்க்கை வாழும் ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் பல நன்மைகளை பெற மகா சிவராத்திரி தினத்தில் திரவனைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம், திருவாரூர் போன்ற புகழ் பெற்ற சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

மிதுனம்:
midhunam

மிடுக்கான பேச்சு திறன் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிவனருளால் பல நன்மைகளை பெறுவதற்கு திருச்செங்கோடு, ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் சிதம்பரம் ஆகிய சிவ தலங்களுக்கு மகா சிவராத்திரி தினத்தன்று சென்று வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கனிவான விஷயம் கொண்ட கடக ராசிக்காரர்கள் பிறை சந்திரனை சூடியிருக்கும் சிவபெருமானின் அருளால் வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு மகா சிவராத்திரி தினத்தில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

சிம்மம்:
simmam

மிகுந்த தைரியம் நிரம்பிய சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த நன்மைகளை பெற மகா சிவராத்திரி தினத்தன்று சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை சிவன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதால் இடர்கள் நீங்கி அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

புதனின் வீடான கன்னி ராசியில் பிறந்த நபர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படுகின்ற இடர்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்க மகா சிவராத்திரி தினத்தன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நன்மை பயக்கும்.

துலாம்:
Thulam Rasi

சுகங்களில் ஊறி திளைக்கும் யோகம் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் சிவ அருளால் பல மேன்மைகளை அடைய மகா சிவராத்திரி தினத்தில் சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி கோயில்களுக்கு சென்று வழிப்படுவதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

விறுவிறுப்பான செயல்பாடுகளை கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிகுந்த நன்மைகளை பெறுவதற்கு மகா சிவராத்திரி தினத்தில் திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும்.

தனுசு:
Dhanusu Rasi

இரக்க சுபாவம் அதிகம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிவனின் அருளால் மிகுந்த நன்மைகளை பெறுவதற்கு மகா சிவராத்திரி தினத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவண்ணாமலை கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

வீர உணர்வு அதிகம் கொண்ட மகர ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறப்பான நன்மைகளை பெற மகா சிவராத்திரி தினத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற எண்ணற்ற இடர்கள் நீங்கி வாழ்க்கை சிறக்கும்.

கும்பம்:
Kumbam Rasi

நிறைகுடம் போன்று அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் மேன்மையான நிலையை அடைய மகா சிவராத்திரி தினத்தில் சிதம்பரம் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam

பொறுமை குணம் அதிகம் கொண்ட மீன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிவ பெருமானின் அருளால் நன்மையான பலன்கள் அதிகம் பெற மகா சிவராத்திரி தினத்தன்று வேதாரண்யம், வேலூர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கட்டும் யோகம் உங்களுக்கு உள்ளதா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi sivan temple in Tamil. It is also called as Sivan kovilgal in Tamil or Shivaratri valipadu in Tamil or 12 rasi in Tamil or Shivaratri in Tamil.

- Advertisement -