- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval12 ராசிக்காரர்களும் சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய தானம்

12 ராசிக்காரர்களும் சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய தானம்

- Advertisement -

சிவராத்திரி அன்று ஈசனை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும். சிவபெருமானின் அருள் கிடைக்கும். செய்த பாவங்கள் தீரும். கர்ம வினைகள் தீரும். இப்படி பல நன்மைகள் உண்டு. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சிவராத்திரி அன்று, சிவராத்திரி இரவு, அதாவது இன்றைய தினம் 26-2-2025 புதன்கிழமை இரவு கண் விழித்து சிவன் வழிபாடு செய்தால், நீங்களே சிவசக்தியை உணர முடியும்.

சிவன் என்றால் யார் என்பதை ஒருவர் சொல்லியோ அல்லது படித்தோ நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அந்த சக்தியை நாம் மனதார உணர வேண்டும். அதற்காக கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு ராத்திரி இந்த சிவராத்திரி. நீங்கள் சிவனை உணர வேண்டும் சிவ சக்தி உங்களுக்குள் கலக்க வேண்டும் என்றால் இன்று இரவு 12 மணியிலிருந்து 1 மணிக்குள் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து, முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து உட்கார்ந்து, “சிவசிவ” நாமத்தை சொல்லி உங்களை பிரபஞ்சத்தோடு கலக்கச் செய்யுங்கள்.

- Advertisement -

சிவசக்தியை நிச்சயம் இன்று நீங்கள் உணருவீர்கள். இதையும் தாண்டி ஒரு சில விஷயங்களை செய்வது நம்முடைய குடும்பத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக இந்த நான்கு கால பூஜைக்கு தேவையான அபிஷேகப் பொருட்களை சிவன் கோவிலுக்கு வாங்கிக் கொடுப்பது, சில பொருட்களை இயலாதவர்களுக்கு வாங்கி தானம் கொடுப்பதும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில விஷயங்களை தானம் செய்வதும் நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

உங்களுடைய ராசி படி நீங்கள் இன்று இரவு நான்கு கால பூஜைக்கு என்னென்ன பொருட்களை சிவபெருமான் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம், அபிஷேகத்திற்கு எந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம், சிவனடியார்களுக்கு சிவ பக்தர்களுக்கு என்னென்ன பொருட்களை வாங்கி தானம் கொடுப்பது நல்லது, எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் வெல்லம் வாங்கி சிவன் கோவிலுக்கு தானம் செய்வது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும். அச்சு வெல்லம், பாகு வெல்லம் அல்லது வெல்லம் கலந்த தண்ணீரை பானகமாக செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுங்கள். மிகவும் நல்லது. சிவன் அடியார்களுக்கு இன்று நீங்கள் பானகம் தானம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்வே குளிர்ச்சி அடையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சிவ பக்தர்களுக்கு, சிவனை வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு, நீர்மூர்தானமாக தானம் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல் அபிஷேகத்திற்கு பசும் தயிர் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பு. இயலாத இரண்டு சிவனடியார்களுக்கு தயிர் சாதம் வாங்கி தானம் கொடுப்பதும் நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சிவன் கோவில் அபிஷேகத்திற்கு கரும்புச்சாறு வாங்கி கொடுங்கள். முடிந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் கரும்புச் சாரில் கொஞ்சம் புதினா இஞ்சி சேர்த்து கலந்து ஜில்லுனு ஐஸ் கட்டிகள் போட்டும் தானம் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கை இனிமையாக மாறும்.

கடகம்

கடக ராசிகாகாரர்கள் இன்று வெள்ளை நிறத்தில் எந்த பொருட்களை வேண்டுமென்றாலும் தானம் கொடுக்கலாம். எந்த பொருட்களை வேண்டும் என்றாலும் அபிஷேகத்திற்கு சிவனுக்கு வாங்கிக் கொடுக்கலாம். பால் தயிர் சர்க்கரை வெள்ளை நிற பூக்கள் இப்படி எந்த பொருளை வாங்கி கொடுத்தாலும் உங்கள் வாழ்வில் அமைதி கிடைக்கும். அதேபோல வெள்ளை நிறத்தில் இருக்கும் உணவு பொருட்களை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதும் சிறப்பு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிவனை அலங்கரிப்பதற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம். சிவனுக்கு நெத்தியில் பட்டை போடுவது போல வெள்ளியில் பித்தளையில் கிடைக்கும். அது போல பொருட்களை வாங்கி தானம் கொடுங்கள் அல்லது வஸ்திரம் வாங்கி தானம் கொடுக்கலாம். சிவன் கோவில் அபிஷேகத்திற்கு பழ வகைகள் இளநீர் வாங்கி தானம் கொடுப்பது உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரவு கண் விழிக்கும் பக்தர்களுக்கு வாழைப்பழம் வாங்கி உங்கள் கைகளால் தானம் செய்து பாருங்கள். ஒரு டெஜன் வாழைப்பழம் வாங்கி தானம் கொடுத்தாலும் உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்லது நடக்கும். கோவிலில் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பழ வகைகளை வாங்கி கொடுங்கள். எலுமிச்சம்பழம் சாத்துக்குடி இதுபோல பொருட்களை வாங்கி கொடுப்பது நன்மையை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கோவிலில் அபிஷேகத்திற்கு சுத்தமான சந்தனம் வாங்கி தானம் கொடுக்கலாம். நிறைய பேர் கோவிலில் கண் விழிப்பார்கள். அவர்களுக்கு பால் டீ காபி எது தேவையோ அதை ஒரு டின்னில் வாங்கிக் கொண்டு போய் சின்ன சின்ன கப்பில் பிடித்துக் கொடுங்கள். உங்களுக்கான நல்லது தானாக நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எள் கலந்த பொருட்களை தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். எள்ளு பருப்பி, எள்ளு சாதம் செய்து கூட கொண்டு போய் ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். சிவன் கோவிலுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுங்கள். உங்களுக்கான பலன் முழுமையாக கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவது மிக மிக நல்லது. சிவராத்திரி அல்லவா. சிவ பக்தர்கள் நிறைய பேர் கோவிலுக்கு வருவார்கள். கோவிலை அசுத்தம் செய்யக்கூடாது என்று எவ்வளவு தான் சொன்னாலும், இந்த நாளில் கோவிலில் கொஞ்சம் குப்பை சேரத்தான் செய்யும். பக்தர்கள் வந்து செல்லுமிடம். அந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து கோவிலுக்கு நீங்கள் உழவார பணி செய்தாலே போதும் நீண்ட நாள் துன்பங்கள் துயரங்கள் நீங்கிவிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சிவன் கோவிலுக்கு தேவையான உதிரி புஷ்பங்களை வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை தரும். இந்த புஷ்பங்களைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்வார்கள் அதோடு கொஞ்சம் உதிரி வில்வ இலைகளையும் வாங்கி கொடுங்கள் நல்லதே நடக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காப்பி தொண்டைக்கு இதமான பானங்களை வாங்கி கொடுங்கள். சிவனடியார்கள் இன்று விடிய விடிய கோவிலில் பாட்டு பாடுவார்கள் அவர்களுக்கு இந்த தானம் செய்வது சிறப்பு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று பன்னீர் திராட்சை வங்கி சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது மிகச்சிறப்பான பலன்களை கொடுக்கும். செவ்வாழை வாங்கி கோவிலுக்கு வரும் சிவ பக்தர்களுக்கு, சிவன் அடியார்களுக்கு தானம் கொடுங்கள். 10 செவ்வாழை வாங்கி தானம் கொடுத்தாலும் போதும் உங்கள் கடன் சுமை கஷ்டங்கள் எல்லாம் விலகும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் வாசனை திரவியங்கள் வாசனை மிகுந்த ஊதுவத்திகள் சாம்பிராணி இதுபோல பொருட்களை வாங்கி சிவன் கோவிலுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது. சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல்லிக்காய் வாங்கி தானமாக கொடுக்கலாம் குளிர்பானங்கள் பழச்சாறு இதுபோல பொருட்களை வாங்கி சிவனடியார்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

சற்று முன்