உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த தானம் செய்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்! 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்?

astro-dhanam
- Advertisement -

பொதுவாக இருக்கும் விஷயங்களை விட, தங்கள் ராசிக்கு உரிய விஷயங்களை செய்யும் பொழுது பலன்களும் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன என்கிறது ஜோதிடம். ராசிக்குரிய மோதிரம் அணிவது, ராசிக்குரிய பலன்களைப் பார்ப்பது கூட இந்த வகையில் அடங்குகின்றன. தத்தம் ராசிக்குரிய பொருட்களை பயன்படுத்துவது மட்டும் அல்ல, தானம் செய்வது கூட நம்மை ராஜயோகம் அடைய செய்யுமாம்! இத்தகு அதிர்ஷ்ட கோடீஸ்வர யோகங்களை பெற, உங்கள் ராசிக்கு நீங்கள் செய்ய வேண்டிய தானம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:
மேஷ ராசிக்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு பூமி மற்றும் சகோதரத்துவ வகைகளில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துகிறார். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையுடன் இருப்பது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்யும். மேலும் அவர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது என்பது உங்களை மென்மேலும் செல்வந்தராக செய்யும். இவற்றை செய்ய முடியாதவர்கள், அவர்கள் வாங்கிய நிலத்தில் நீங்கள் தண்ணீர் தானம் செய்ய போர்வெல் அமைத்து தரலாம். இதனால் உங்களுக்கு வீடு, மனை யோகம் மென்மேலும் பெருகும், கோடீஸ்வரர் ஆகும் யோகம் உண்டாகும். இவற்றில் எதுவுமே செய்ய முடியாதவர்கள் தானியங்களை தானம் செய்து இந்தப் பலன்களை பெறலாம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும், தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதும் பெரும் அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும். இசை, நாட்டியம் என்னும் துறைகளில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம். மேலும் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு வலம்புரி சங்கு வாங்கிக் கொடுக்க கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். ஏழை, எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுப்பது, கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் கோடீஸ்வர யோகம் பெறலாம். இலவச கல்வியை கொடுப்பது, கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வது, அடிப்படை கல்வியை புரிய வைப்பது அல்லது ஆலோசனை கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வம் சேருமாம்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்கள் நெல், அரிசி போன்ற வகைகளை தானம் செய்யலாம். மேலும் வெள்ளையாக இருக்கும் உணவு பொருட்களை தானம் செய்யலாம். பால், தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களை தானம் செய்து வந்தால் அதிர்ஷ்ட யோகங்களை பெறலாம். மேலும் பொது நலக் காரியங்களில் ஈடுபடுவதும், பொது விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதும், சொல்லிக் கொடுப்பதும் கோடீஸ்வர யோகத்தை உண்டு பண்ணும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவான் மந்திரங்களை உச்சரித்து வருவதும், சூரிய மந்திரங்களை புத்தகமாக அச்சடித்து தானம் செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும், நிர்வாக பதவியில் அமர்ந்து இருப்பவர்களுக்கும் உங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்கி வந்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் புத பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால் குழந்தைகளின் கல்வி சார்ந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கும் பொழுது அதிர்ஷ்ட யோகங்களைப் பெறுகிறார்கள். மேலும் பச்சை நிற உடை அணிவது, பச்சை நிற தானியங்களை உணவாக சமைத்து தானம் செய்வது போன்ற விஷயங்களை செய்யும் அதிர்ஷ்ட யோகங்களை பெறுவீர்கள். பச்சை பயறு பச்சை நிறத்தில் இருக்கும் தானியங்களை நீங்கள் பயிரிடுவது அல்லது விவசாயிகளுக்கு பயிர் செய்ய உதவுவது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது செல்வந்தராகும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் நேர்மையாக இருக்க விரும்புகிறார்கள். நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் நீங்கள் உங்கள் கண் முன் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்பதே ஒரு தானம் தான். ஏழை எளியவர்களுக்கு வழக்குகள் தொடர்பான விஷயங்களில் உதவி செய்வது, பஞ்சாயத்து தொடர்பான விஷயங்களில் உங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்றுவது, ஒருவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழியை போக்க நீங்களாக முன்வந்து மனமுவந்து உதவி செய்வது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடும் பொழுது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய அதிர்ஷ்ட பலன்கள் பெருகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டும் விஷயங்களில் உதவிகள் செய்வது பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். ஓலை, ஓடு, செங்கல், சிமெண்ட், சென்ட்ரிங் போன்ற பொருட்களை தானம் செய்வதன் மூலம் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் வந்து சேரும். மேலும் கல்யாண வீடுகளுக்கு உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உதவி செய்வதும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற செய்யும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும், பள்ளி வளாகங்களுக்கு தேவையான உதவிகளை உங்களால் முடிந்த மட்டும் செய்து கொடுத்து வர அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகும். ஆசிரிய பெருமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது கூட உங்களுக்கு யோகம் தான். மேலும் நோய், நொடிகள் இன்றி இருக்க கோவில்களில் தீர்த்தத்தில் போட்டுக் கொடுக்கும் நகைகளை உடம்பில் அணிவது சிறப்பான பரிகாரமாக இருக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பதால் நீங்கள் செய்யக் கூடிய சிறு சிறு தானங்கள் கூட மிகப் பெரிய அளவில் உங்களுக்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். தர்மவான் ஆக இருக்கும் சனி பகவான் அருள் பெறுவதற்கு பிள்ளைகள் கைவிட்ட முதியோருக்கு உதவி செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு படைப்பது, தண்ணீர் கொடுப்பது கூட பெறற்கரிய பலன்களை உங்கள் ராசிக்கு கொடுக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் பொறுத்தவரை வெளி நபர்களுக்கு உதவி செய்வதை விட, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது பேரதிர்ஷ்டத்தை கொண்டு சேர்க்கும். பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் உங்கள் முன்னேற்றம் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவியாக இருந்தாலும் சரி, நீங்கள் பணிபுரியும் இடங்களில் பெண் ஊழியர்கள் இருந்தாலும் சரி அவர்களுடைய கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது, அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது போன்றவை கூட நீங்கள் செய்யக்கூடிய சிறப்பான தானங்கள் தான். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் தருவது தான் உங்கள் ராசிக்கு முக்கியமாக கோடீஸ்வர யோகத்தை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் முருக பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும், முருகன் கோவில்களுக்கு தேவையான உதவி செய்வது அதிர்ஷ்ட பலன்களை பெற்றுக் கொடுக்கும். விநாயகரின் அம்சமாக விளங்கும் யானைக்கு தேவையான உதவிகளை செய்வது, தேங்காய் வாங்கிக் கொடுப்பது போன்ற தானங்களை நீங்கள் செய்யும் பொழுது கோடீஸ்வர யோகத்தை பெறுகிறீர்கள். இவையெல்லாம் சூட்சம பரிகாரங்கள், இதை செய்வதால் அதிர்ஷ்டம் பெருகும்.

- Advertisement -