- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று மாலை பிரதோஷ வழிபாடு

இன்று மாலை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

பிரதோஷம் என்றால் சிவன் கோவிலுக்கு சென்று அந்த எம்பெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனை காண்பது தான் எங்களுடைய வழக்கம். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பிரதோஷ நேரத்தில் 4:30 மணி அடித்ததும் நாங்கள் எல்லோருமே கோவிலில் தான் இருப்போம் என்று சொல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அதிலும் இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாள். மிக மிக அதி சக்தி வாய்ந்த நாள். இந்த நாளில் சிவபெருமானை வழிபாடு செய்தால் பிறவி கடன் அடையும். பொருளாதார ரீதியாக வாங்கி வைத்திருக்கும் பணம் சம்பந்தப்பட்ட கடன் அடையும். நோய் நொடிகள் தீரும், இப்பேற்பட்ட நாளில் கோவிலுக்கு செல்லக்கூடாதா.

- Advertisement -

என்ன எதிர்மறையான வார்த்தை இது, என்று எல்லோரும் சிந்திக்கலாம். ஆனால், இன்று பருவ மாற்றத்தின் காரணமாக எல்லா இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் மாலை நேரத்தில் மழை துவங்கக்கூடிய காரணத்தால் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பாக இந்த பிரதோஷ நாளில் வழிபாடு செய்யப் போகின்றோம். கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அதே பலனை பெறக்கூடிய எளிமையான வழிபாடு இது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே பிரதோஷ வழிபாடு

இன்று மாலை பிரதோஷ நேரம் துவங்கிய உடனேயே உங்கள் வீட்டு பூஜை அறையை கோவிலாக நினைத்துக் கொள்ளுங்கள். சிவலிங்கம் இருந்தால் அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவபெருமானின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பூக்களை சாத்துங்கள். வெளியில் சென்று எதுவும் வாங்கி வந்து வைக்க வேண்டாம்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது பொருளை நெய்வேதியமாக வைத்து விடுங்கள். இரண்டு கல் கண்டு வைத்தால் கூட போதும். அண்ணாமலை ஈசனின் திருவுருவப்படும், நிறைய பேர் வீட்டில் இருக்கும். அண்ணாமலையானே கூட பிரதோஷ காலத்தில் வைத்து வழிபாடு செய்யலாம்.

எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் விபூதி என்பது கட்டாயமாக இருக்கும். அதை கடைக்கு சென்று வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வழக்கம் போல பிரதோஷ நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து உட்கார்ந்துக்கோங்க. ஈசனின் படம் இருந்தால் அந்த ஈசனின் படத்திற்கு முன்பு ஒரு வாழை இலை அல்லது ஒரு தட்டு வைத்து விபூதியை எடுத்து அர்ச்சனை செய்யுங்கள்.

- Advertisement -

‘ஓம் நமசிவாய ஓம்’ என்ற மந்திரத்தை சொல்லி விபூதியால் அர்ச்சனை செய்து, சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். இந்த பிரதோஷ நேரம் முடியும் வரை இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தவறே கிடையாது. எல்லோரும் மனதளவில் பயத்தோடு இருக்கும் இந்த நேரத்தில் சிவனை விபூதி அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபாடு செய்வது எல்லோருக்கும் ஒரு மன பலத்தை கொடுக்கும், தைரியத்தை கொடுக்கும்.

வரக்கூடிய மழை பிரச்சினையிலிருந்து நம்மை பாதுகாக்க கூடிய வழிபாடு இது. கோவிலுக்கு சென்று ஈசனை வழிபாடு செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்துவிடும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த நாளில் உங்களுக்கு மட்டும் வேண்டுதல் வைக்காதீங்க. மழையால் யாருமே பாதிக்கப்படக்கூடாது என்று அனைவருக்காகவும் ஒரு வேண்டுதலை வைப்போம்.

ஈசன் நமக்கு செய்யக்கூடிய நல்லதை பல மடங்காக செய்து கொடுப்பான். சிவனுக்கு அர்ச்சனை செய்த இந்த விபூதியை தினம் தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஈசனின் எந்த திருவுருவப்படமும் உங்கள் வீட்டில் இல்லை என்றால் ஏற்றி வைத்திருக்கும் விளக்கு முன்பு இந்த அர்ச்சனையை செய்யலாம் தீபச்சுடலில் ஈசன் உங்களை வாழ்த்துவான்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் நரசிம்மர் வழிபாடு

இவ்வளவுதான் எளிமையான வழிபாடு. இந்த ஈசன் வழிபாட்டிற்காக, இன்று வெளியிடங்களுக்கு சென்று கோவில் குளங்களுக்கு சென்று, அபிஷேக ஆராதனை பார்த்து ஆக வேண்டும் என்று யாரும் ரிஸ்க் எடுக்காதீங்க. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டி, அந்த ஈசனை வணங்கி, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்