தற்போது உள்ள இதே மாதிரியான நோய், இதே லாக் டவுன் முறை 1918ல் இருந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா? விவரம் இதோ.

nooi

கொரோனா தோற்றால் இன்று பல நாடுகளும் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. முகக்கவசம் அணிவதும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதலுமே இதற்கான தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் பலர் கூறு வருகின்றனர். ஆனால் இது போன்ற ஒரு அசாதாரண சூழலும் கட்டுப்பாடுகளும் கனடாவில் உள்ள கெலோவ்னா நகர வாசிகளுக்கு புதிதல்ல. இதை எல்லாம் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

corona

தற்போதுள்ள கொரோனா போல 1918 ஆன் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளு என்னும் கொடிய நோய் உலகை அச்சுறுத்தியது. அச்சமயம் கனடாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால், 10கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடகூடாது, பள்ளிகள் கல்லூரிகள், சர்ச்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட வேண்டும், மக்கள் அதிக அளவியில் கூடும் திரை அரங்குகள், விளையாட்டு கூடங்கள் போன்றவை மூடப்பட வேண்டும் இப்படியாக பல அறிவிப்புகள் வெளியாகின.

அதே போல ஸ்பானிஷ் ஃப்ளு பாதிப்பு உள்ளவர்கள் தனிமை படுத்திக்கொள்ளுமாறும், மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியுமாறும், ஸ்பானிஷ் ஃப்ளுவால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்காமல் தள்ளி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஸ்பானிஷ் ஃப்ளுவானது உலகில் 500 மல்லியம் மக்களை பாதித்தது. அதாவது கிட்டதட்ட உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்களை பாதித்தது. இதில் 20 முதல் 50 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள் என்று history இணையதளம் கூறுகிறது.

முதன் முதலில் ஐரோப்பில் கண்டறியப்பட்ட இந்த நோய், உலகின் பலவேறு நாடுகளுக்கும் பரவ துவங்கியது. இந்த நோயானது இளம் வயது பிள்ளைகளையும், முதியவர்களையும், சக்கரை நோய், இதய சம்மந்தமான நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களையே அச்சமயம் அதிகம் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்ரிக்கு பிறகு 1919 ஆம் ஆண்டு இந்த நோய் அமெரிக்காவில் கட்டுக்குள் வந்தது.

kirumi

தற்போதுள்ள கொரோனவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு நோயாக இருப்பதால் இதுவும் நிச்சயம் விரைவில் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். தனி மனித இடைவெளியை கடைபிடிப்போம், அத்யாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் செல்வோம், முக கவசம் அணிவோம் கொரோனாவை அதி விரைவாக விரட்டுவோம்.