தேங்காய் எண்ணெயை தலைக்கு இப்படி வைப்பதன் மூலம் தலைமுடி இரண்டு மடங்கு அதி வேகமாக வளரும். முடி வளர்ச்சியை பிறகு நீங்களே நினைத்தால் கூட, தடுத்து நிறுத்த முடியாது.

hair-growth-oil
- Advertisement -

வளராத வளராத என்று சொன்னால் கூட, உங்கள் தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கும். வளர்ந்த முடியை மெயின்டைன் செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். என்னங்க சொல்றீங்க. அந்த அளவுக்கா முடி இருக்கு. இருக்கிற நாலு முடியும் தலை சீவும் போதும், தலைக்கு குளிக்கும் போதும் கொட்டி போகுது. வழுக்கை விழாமல் இருந்தால் சரி, என்ற நிலைமை தான் நாம் எல்லோருக்கும் இருக்கு. ஆனா எளிமையான முறையில் தேங்காய் எண்ணெயை தலைக்கு இப்படி தேய்த்து, பிறகு தலைக்கு குளித்து பாருங்களேன். உங்களுடைய தலைமுடி திக்காக இரண்டு மடங்கு வேகமாக வளர தொடங்கி விடும். தலை முடியை கடகடவெ என அழகாக வளர்க்க மலிவான அழகு குறிப்பு தேவை என்பவர்கள் குறிப்பை தொடர்ந்து படிக்கலாம்.

இரண்டு மடங்கு வேகமாக முடி வளர அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேவை. நல்ல மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைமுடிக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சின்ன சில்வர் கிண்ணத்தில் ஊற்றி டபுள் பாய்லிங் மெதடில் சூடு செய்யவும்.

- Advertisement -

அதாவது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யுங்கள். அந்த சுடு தண்ணீரின் மேல் இந்த சின்ன தேங்காய் எண்ணெய் கிண்ணத்தை வைத்து, சூடு செய்ய வேண்டும். இதை தான் டபுள் பாய்லிங் மெத்தேட் என்று சொல்லுவார்கள். பல பேருக்கு இது தெரிந்திருக்கும். இப்படி வெதுவெதுப்பாக சுடுதண்ணியில் சூடான தேங்காய் எண்ணெயில் 2 விட்டமின் ஈ கேப்ஸ்யூல்(Evion) வெட்டி போட்டுக்கோங்க.

அந்த கேப்சூலுக்கு உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் அந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் என்றால், 2 விட்டமின் இ கேப்ஸ்யூல் சரியாக இருக்கும். உங்கள் முடி ரொம்ப சின்ன முடி அப்படின்னா விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1 போடுங்க போதும். இப்போது இந்த தேங்காய் எண்ணெயை உங்கள் தலையில் வைத்து ஸ்கேல்பில் நன்றாக மசாஜ் செய்யவும். இப்படி மசாஜ் செய்யும் போது ஸ்கேல்பில் ரத்தம் ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். (தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும் போதே தலையில் தடவனும்.)

- Advertisement -

பிறகு மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெயை நுனி முடி வரை தடவி அப்படியே விட்டுவிடுங்கள். இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கழித்துக் கூட தலைக்கு குளித்துக் கொள்ளலாம். அல்லது இரவு இந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து விட்டு மறுநாள் காலை ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம்.

ஷாம்புவை எப்படி தலைக்கு போட்டு குலிப்பீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீரை எடுத்துக்கோங்க. அந்த தண்ணீரில் நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி, தேவையான அளவு அந்த ஷாம்பு வை கலக்க வேண்டும். பிறகு இதில் எலுமிச்சை பழச்சாறு 1/2 ஸ்பூன், ரோஸ்மேரிசனல் ஆயில் 5 சொட்டு, விட்டு நன்றாக கலந்து இந்த தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்து அலசி பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கருகருவென படர்ந்த கடல் அலைப் போல அலை பாயும் கருங்கூந்தலை பெற இந்த எண்ணெய் உங்களிடம் இருந்தாலே போதும். உங்கள் முடியின் அழகை பார்ப்பவர் யாராயினும் ஒரு கணமாவது அதிசயிக்காமல் இருக்கவே முடியாது.

உங்களுடைய தலைமுடி ஷைனிங்காக அழகாக மாறி இருக்கும். முடி உதிர்வு குறைந்திருக்கும். அதோடு மட்டுமல்லாமல் வாரத்தில் மூன்று நாள் மேல் சொன்னபடி தேங்காய் எண்ணெயில் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் கலந்து தலைக்கு குளித்து வர ஒரே மாதத்தில் புதிய முடிகள் வளர்ந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும். ரொம்ப ரொம்ப ஈஸி மெத்தடுங்க. உங்களுக்கு தேவை என்றால் இந்த அழகு குறிப்பு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -