வெறும் 2 நிமிடத்தில் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சூப்பரான பூண்டு பொடி செய்வது எப்படி? இது வழக்கமா செய்ற பூண்டு பொடி மாதிரி இல்லைங்க.

poondu-podi
- Advertisement -

வழக்கமாக ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாதிரி பூண்டு பொடி செய்வோம். இட்லி தோசைக்கு என்னதான் சட்னி தொட்டு சாப்பிட்டாலும், இந்த பூண்டு பொடியை தொட்டு சாப்பிடுவது ஒரு அலாதியான சுவைதான். சில பேருக்கு இந்த பூண்டு பொடி ரொம்ப ரொம்ப விருப்பமாக இருக்கக்கூடிய ஒரு சைடு டிஷ்ஷா கூட இருக்கும். உங்களுக்கு பூண்டு பொடி ரொம்பவும் பிடிக்குமா. சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா. ஒரு நாள் இதை ட்ரை பண்ணி பாருங்க.

மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முழு பூண்டை தனித்தனி பல்லாக பிரித்து போட்டுக் கொள்ள வேண்டும். பூண்டு தோலை உரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேல் தோலை மட்டும் நீக்கிவிட்டால் போதும். ஒருவேளை உங்களுக்கு பூண்டு தோல் பிடிக்கவில்லை என்றால் எல்லா தோலையும் நீக்கிவிட்டு கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் பூண்டு பல் – 20, குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த நான்கு பொருட்களை போட்டு கொரகொரப்பாக ஓட்டி எடுக்க வேண்டும். பல்ஸ் மோடில் ஓட்டினாலே போதும். (தனி மிளகாய் தூள் தேவை இல்லை. வெறும் குழம்பு மிளகாய் தூள் போதும் என்றால் நீங்கள் காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.)

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 2, கருவாப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெய் சுடச்சுட இருக்கும்போது, உடனடியாக அரைத்து வைத்திருக்கும் அந்த பூண்டு விழுதை எண்ணெயில் கொட்டி நன்றாக கலந்து விட வேண்டும். (நல்லெண்ணையில் தான் இந்த பூண்டு பொடி செய்ய வேண்டும்.)

- Advertisement -

எண்ணெய் சூடாக இருக்க வேண்டும். அடுப்பு அனைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மிக்ஸி ஜாரில் அரைத்த பூண்டு விழுது எண்ணெயில் போட்ட பின்பு கருகி விடக்கூடாது. ஒருவேளை பூண்டு விழுது எண்ணெயில் கருகி விட்டால் இதன் சுவை நன்றாகவே இருக்காது.

அவ்வளவு தாங்க. சூப்பரான சுவையான பூண்டு பொடி தயார். கல் தோசை சுட சுட இட்லிக்கு இது செம சைடிஷ் ஆக இருக்கும். தேங்காய் சட்னியுடன் இந்த பூண்டு சட்னியை பரிமாறினால் அடடா சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. ரெண்டு இட்லி அல்ல, 20 இட்லி கூட சாப்பிடலாம். பூண்டு வாசனை பிடிப்பவர்கள், பூண்டு பிரியர்கள் இந்த ரெசிபியை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க.

- Advertisement -