ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு முதல் காரணமே இந்த மூன்று விஷயங்கள் தான். சோம்பேறித்தனமாக இருப்பது, தேவையற்ற விஷயங்களை சிந்தித்து, நெகட்டிவ் எனர்ஜியை உருவாக்கிக் கொள்வது, எல்லா விஷயத்திற்கும் பயந்து பயந்து விலகி நிற்பது. இந்த விஷயங்களில் இருந்து நாம் வெளிவந்து விட்டாலே போதும்.
வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். இதற்கான நேரமும் காலமும் கை கூடி வரவேண்டும் அல்லவா. உங்களுக்கான நேரமும் காலமும் கைகூடி வந்துவிட்டது. நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் அஷ்டமி திதி. இந்த நாளில் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த மூன்று தெய்வங்களை வழிபாடு செய்தாலே போதும். உங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் விலகி விடும்.
சிவபெருமான், பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர். நாளை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் இவர்கள்தான். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போங்க, பெருமாள் கோவிலுக்கு போங்க, லட்சுமி நரசிம்மரையும் தரிசனம் செய்யுங்கள். மூன்று தெய்வங்களையும் நாளை ஏதாவது ஒரு இடத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
வீட்டு பக்கத்திலேயே சின்ன சின்ன சன்னிதானம் உள்ள கோவில்கள் இருக்கிறது என்றாலும், சென்று நாளைய தினம் இந்த மூன்று கோவிலிலும் நல்லெண்ணெய் தீபம் போட்டு, உங்களால் முடிந்த பொருட்களை இந்த கோவிலுக்கு வாங்கி கொடுத்து 3 தெய்வங்களையும் தரிசனம் செய்து வந்தாலே உங்கள் வாழ்க்கையை பிடித்த பீடை அகலும்.
லட்சுமி நரசிம்மர் சன்னிதானம் இல்லாத பட்சத்தில், வெறும் நரசிம்மர் சன்னிதானம் இருந்தாலும், அவரையும் தரிசனம் செய்யலாம். சிவன் கோவிலில் அமர்ந்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லுங்கள். பெருமாள் கோவிலில் அமர்ந்து “ஓம் நமோ நாராயணா” மந்திரத்தை சொல்லுங்கள். லட்சுமி நரசிம்மர் சன்னிதானத்தில் அமர்ந்து “நரசிம்ம மூர்த்தியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை சொல்லி உங்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டின் அருகில் இந்த மூன்று கோவிலும் இல்லை என்றால், சிவன் கோவில் பெருமாள் கோவிலுக்கு மட்டுமாவது சென்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாளை காலை உங்களுடைய வேலையை துவங்குவதற்கு முன்பு, இந்த வழிபாட்டை செய்வது, மிக மிக சிறப்பு. காலை 7 மணிக்கு முன்பாக கோவிலுக்கு சென்று வரவும். இது முதல் வழிபாடு. நாளை இந்த வழிபாட்டை செய்தால் வாழ்க்கையில் சீக்கிரம் நீங்கள் முன்னேறி தேவையான அத்தனை வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.
அடுத்ததாக அஷ்டமி என்றாலே நாம் நினைவுக்கு வருபவர் பைரவர் தான். அஷ்டமி வழிபாட்டை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். நாளை மாலை பழமையான சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் அபிஷேகத்தில் கலந்துகொண்டு, வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
புனுகு வாங்கி கொடுத்து பைரவர் பாதத்தில் வைத்து எடுத்து, அதை ரூபாய் நோட்டில் தடவி, கடன் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்தால், கடன் சுமையிலிருந்து விடுபடலாம். பைரவர் சன்னிதானத்தில் பூசணிக்காய் தீபம் ஏற்றலாம். பைரவருக்கு முந்திரி பருப்பு வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம். இதுபோல சின்ன சின்ன எளிய வழிபாடுகளை நாளை மாலை செய்தாலே, காலத்தால் வரும் துன்பங்கள் உங்களை எதுவுமே செய்யாது.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்
அதுபோல கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் எதிரி தொல்லையிலிருந்து விடுபடவும், இந்த கால பைரவர் வழிபாடு சிறப்பானது. மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் நாளைய தினம் பின்பற்ற வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்களால் முடிந்த, ஏதாவது ஒரு விஷயத்தை செய்து சின்னதாக நாளைய தினம் இறை வழிபாட்டை மட்டும் செய்து விடுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.