நம்மில் நிறைய பேருக்கு, அழகழகான தங்க நகைகளை வாங்கி போட்டு அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். விளம்பரத்தில் பார்க்கும் போதெல்லாம் இதுபோல ஒரு நெக்லஸ், இதுபோல ஒரு கம்பல் வாங்க வேண்டும் என்று கட்டாயம் நம்முடைய மனதில் ஆசை வரும். ஆண்களாக இருந்தால் அவர்கள் அணியும் அணிகலன்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இப்படி புது தங்க நகைகள் வாங்க வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்கக்கூடிய கஷ்டங்களும், வறுமையும் நம்மை விட்டு விலக வேண்டும். அப்போதுதான் செல்வ செழிப்பு அதிகரித்து, நம்முடைய இந்த கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் வரும். இது முதல் விஷயம்.
இரண்டாவது புது தங்க நகைகள் எல்லாம் வேண்டாம். என்னுடைய 10 பவுன் தங்க நகை அடமானத்தில் இருக்கிறது. அதை மீட்டு எடுத்தால் போதும். இறைவா அதற்கு ஒரு வாய்ப்பு கொடு என்று கேட்கக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்வதற்கு ஒரு அற்புதமான வழிபாட்டு முறையையும், அற்புதமான ஒரு வரி மந்திரத்தையும் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இன்றைய தினம் தேய்பிறை அஷ்டமி திதி வந்திருக்கிறது. உங்களுடைய கஷ்டங்கள் உங்களை விட்டு விலக வேண்டும் என்று, இந்த பிரார்த்தனையை மட்டும் பைரவரை நினைத்து செய்தால் போதும். உங்களுக்கான நல்லது சீக்கிரம் நடக்க துவங்கிவிடும் கெட்டது சீக்கிரம் உங்களை விட்டு விலகி விடும்.
இன்று 20-4-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகு கால நேரம். தேய்பிறை அஷ்டமி திதியும் இந்த நேரத்தில் பிறந்து விடுகிறது. முடிந்தால் பக்கத்தில் இருக்கும் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று அந்த இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கோவிலுக்கு செல்ல முடியவில்லை வருத்தம் வேண்டாம்.
வீட்டிலேயே பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு விரிப்பு விரித்துவிட்டு அதன் மேல் அமர்ந்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள். மந்திரத்தை சொல்வதற்கு முன்பு கண்களை மூடி வைரவரை உங்கள் மனதிற்குள் கொண்டு வர வேண்டும். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். பைரவர் லக்ஷ்மி தாயை அப்படியே மடியில் அமர வைத்து பிரம்மாண்டமாக இருக்கிறார்.
அது உங்கள் கண் முன் தெரியட்டும். தங்கம் வைரம் வைடூரியம் என்ன கற்பனை செய்கிறீர்களா, செய்து கொள்ளுங்கள், எல்லாம் உங்களை சுற்றி இருக்கிறது. நீங்கள் அப்படியே தங்கத்தில் ஜொலிக்கிறீர்கள். அப்படி ஒரு கற்பனை மனதிற்குள் செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
சுவர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்வர்ண பைரவாய நமஹ !
இவ்வளவுதான். எளிமையான மந்திரம் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லலாம். 308 முறை சொல்லலாம். 1008 முறை கூட சொல்லிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இன்றைய தினம் இந்த மந்திரத்தை எவ்வளவு சந்தோஷமாக சொல்கிறீர்களோ அவ்வளவு சந்தோஷத்தோடு அடமானத்தில் இருக்கும் தங்க நகைகள் உங்கள் வீட்டிற்குள் வரும். கடன் சுமையெல்லாம் படிப்படியாக குறையும். கஷ்டம் பின் வாசல் வழியாக சென்று விட்டால், முன் வாசல் வழியாக நிச்சயம் நம்மை தேடி மகாலட்சுமி வந்துவிடுவாள். பிறகு சந்தோஷமாக வாழலாம். இந்த எளிமையான வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: 20-04-2025 தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்
உங்களால் முடிந்தால் முந்திரி வாங்கி அதை மஞ்சள் நூலால் மாலையாக கட்டி அந்த பைரவருக்கு மாலையாக அணிவித்து, மீண்டும் அந்த மாலையை வாங்கி ஒவ்வொரு முந்திறியாக எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுங்கள். 21 முந்திரி, 51 முந்திரி இப்படி உங்களுடைய வசதிக்கு தகுந்தபடி இந்த முந்திரி மாலையை நாளைய தினம் பைரவருக்கு செலுத்தலாம், என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.