2022 புத்தாண்டு பலன்கள் – தனுசு

2022-dhanusu
- Advertisement -

எதையும் தாங்கும் இதயம் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கை இனி அதில் இருந்து ஓய்வு பெற இருக்கிறது. ஒரு பிரச்சனையை போனால் இன்னொரு பிரச்சனை என்று தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஆறுதல் தரும் ஆண்டாக அமைய இருக்கிறது. என்னடா இது வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு அந்த நிலை மாறும் தருணம் வந்துவிட்டது என்றே நினைத்துக் கொள்ளலாம். மேலும் 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம்.

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்க இருக்கிறது. செலவுகள் உங்களை திக்குமுக்காட செய்தாலும் வரக்கூடிய செலவுகள் சுப செலவுகளாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடையலாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அலைச்சலும், விரயங்களும் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. தொலைந்து போன கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு அமைய இருக்கிறது.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான முன்னேற்றம் 2022ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லவையாக அமைய இருக்கிறது. இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுக்கு ஏற்ப வரவும் வரக் கூடிய அற்புத பலன்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை பெருமளவு கைகொடுக்க இருக்கிறது. செலவுகளை கட்டுக்குள் அடக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தை ஏற்றத்தில் கொண்டு செல்ல குடும்ப பெண்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதில் பலன் பெறலாம்.

தொழில்:
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்க கூடிய அற்புத ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வாடகை இடத்திலிருந்து, சொந்த இடத்திற்கு தொழிலில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். ஆண்டின் துவக்கத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும், போகப்போக பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைத்து சாதனைகளைப் புரியும் அற்புத ஆண்டாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி, பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

- Advertisement -

ஆரோக்கியம்:
உடல், மனம் ஆகிய விஷயங்களில் சற்று குழப்ப நிலைத் தொடரும். பாத சனி உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கூடுமானவரை உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளுங்கள். வெளியில் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஜங்க் புட், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

காதல்:
கணவன், மனைவி இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். இவ்வாண்டு சாதகமான ஆண்டு என்பதால் திருமண வைபவங்கள் கைகூடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு பல எதிர்ப்புகளையும் தாண்டி உங்கள் காதல் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் நிதானமாக பெரியவர்களின் ஆசியுடன் எதையும் செய்ய முயற்சிப்பது நல்லது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இவ்வாண்டு அற்புதம் நிகழ இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் உண்மை நிலை அறிந்து பின்னர் வார்த்தையை உபயோகிப்பது நல்லது.

பரிகாரம்:
2022ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை சுப பலன்கள் அதிகம் காணப்படுவதால் நீங்கள் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். துன்பங்கள் தீர ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வாருங்கள்.

- Advertisement -