5/2/2023 சக்தி வாய்ந்த தைப்பூசம்! முருகனுக்கு உகந்த இந்த தைப்பூசத்தில் நினைத்ததெல்லாம் நிறைவேற விரதம் இருந்து வழிபடுவது எப்படி? விரத பலன்கள் என்னென்ன?

- Advertisement -

இந்த வருடம் ஆங்கில மாதத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் தைப்பூசம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. முருகனுக்கு உகந்த இந்த பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிய தை மாத பூசம் தைப்பூசம் எனப்படுகிறது. இந்நாளில் வேண்டிய வரங்களை அருளக்கூடிய முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூசம் குரு பகவான் உடைய நட்சத்திரம் என்பதால் இந்நாளில் குரு வழிப்பாடும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் எடுக்கக் கூடிய ஒவ்வொரு விஷயங்களும் வெற்றி அடையும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு முதல் முதலாக சாதம் ஊட்டுவது, எழுத்தாணி பழகுவது, ஏடு தொடங்குவது போன்ற விஷயங்களையும் இந்நாட்களில் செய்வது உண்டு. குழந்தைகளுக்கு காது குத்தும் திருவிழாவும் நடைபெறும்.

- Advertisement -

திருமணத்தில் தொடர் தடைகளை உடைத்து எறிந்து திருமண பாக்கியத்தை அருளக்கூடிய இந்த தைப்பூசம் நன்னாளில் வரன் தேடுபவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் முருகப்பெருமானை இந்நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் முருகப்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, ஆராதனைகளை தரிசித்து பயன் பெறலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் பாலும், பழமும் எடுத்துக் கொள்ளலாம். இன்று ஒரு நாள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வயிற்றை பட்டினி போட்டு முருகனுடைய கவசங்களை பாட வேண்டும்.

சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், முருகன் மந்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து உச்சரித்து முருகனை நினைத்து கொண்டிருக்க வேண்டும். வீட்டில் வேல் வழிபாடு செய்பவர்களும் இந்நாளில் வேலுக்கு அபிஷேகம் செய்து, முருகனை அலங்கரித்து முருகனுக்கு உகந்த நைவேத்தியங்களை படைத்து தூப, தீப, ஆராதனை காண்பிப்பார்கள். இந்த நாளில் தான் அன்னை பார்வதி முருகனுக்கு ஞானவேல் வழங்கிய தினமாகும் எனவே இன்றைய நாள் வேல் வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேர்பட்ட பகைகளும் ஒழிந்து போவர் என்பதை நம்பிக்கை.

- Advertisement -

தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை வழிபட்டு காவடி எடுப்பது வழக்கம். இப்படி தைப்பூச நாளில் காவடி எடுப்பவர்களுக்கு எந்த விதமான பில்லி, சூனியம் போன்ற ஏவல்களும் அண்டாது என்பது நம்பிக்கை. மாந்திரீகம், தாந்த்ரீகம் எதுவும் இவர்களிடம் பலிக்காது அதுவே அடிபணிந்த ஏவல் செய்யக்கூடிய அளவிற்கு சக்தி இழக்கம் செய்து விடும் இந்த பூச நட்சத்திரத்தில் கண்டிப்பாக விரதம் இருப்பது நன்மை தரும்.

மேலும் தைப்பூசத்தில் வேல் வழிபாடு வீட்டில் செய்தால் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அகலும் மேலும் செல்வ செழிப்பு உண்டாகும், வறுமை நீங்கும், துன்பங்கள் துலையும், நினைத்தது நிறைவேறும். மேலும் இன்றைய நாளில் முருகனுக்கு நடக்கக்கூடிய அலங்காரங்கள், அபிஷேகங்களை கண்குளிர தரிசிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கணவன் மனைவி ஆகியோர் தம்பதியாக சென்று இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டால் அவர்களுக்குள் சண்டை, சச்சரவு என்பதே வராது.

இதையும் படிக்கலாமே:
ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்! காகத்திற்கு இதை மட்டும் வைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். கோடிகள் குவியம்.

தேவாரம், திருவாசகம், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை, கந்த கலிவெண்பா, கந்தர் அனுபூதி படிப்பது, ருத்ராட்சம் அணிவது சிவபெருமானை வழிபடுவது, சிவ பார்வதியை வழிபடுவது, சனீஸ்வரரை வழிபடுவது போன்றவையும் இந்நாட்களில் மிகுந்த விசேஷமாக கருதப்படுகிறது. குழந்தை இல்லா தம்பதிகள் முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி தைப்பூசத் திருநாளில் விரதம் இருந்து வழிபடலாம். தம்பதியருக்குள் ஒற்றுமை இன்மை, விவாகரத்து வரை சென்ற வழக்குகள் கூட ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய அற்புதமான இந்த தைப்பூச நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுதல் சிறப்பு.

- Advertisement -