- Advertisement -
Homeஜோதிடம்புத்தாண்டு பலன்கள்2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான...

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான கணிப்பு!

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சந்தோஷம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இதுநாள் வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கைநிறைய சம்பளத்துடன் கூடிய சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமையில் சிக்கி இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல காலம் பிறக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைத்து விடுவீர்கள். திருமணம் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாத நபர்களின் யோசனையை வைத்து நிறைய புதிய முதலீடுகளை செய்யாதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வருடம் முழுவதும் பெருசாக எந்த பிரச்சனைகளும் இருக்காது. இருந்தாலும் நீங்கள் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது. ஒரு ரூபாயாக இருந்தாலும், சரி 100 ரூபாயாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரே மதிப்பை கொடுத்து நடக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெரிய முதலாளியாக இருந்தாலும் சரி, அந்த அலுவலகத்தை கூட்டி சுத்தம் செய்பவர்களிடத்திலும் சரி, மரியாதைையோடு நடந்து கொள்ள வேண்டும். யாரையும் மரியாதை குறைவாக பேசாதீங்க. குடும்ப விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் அதிகமாக வாக்குவாதம் செய்யக்கூடாது. ஈகோவை குறைப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிறைய நல்ல வாய்ப்புகள் வீட்டு வாசல் கதவை தட்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடினமான உழைப்பை மட்டும் முதலீடாக போடுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கையை ஒரு நாளும் கைவிடாதீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயர துவங்கும். சேமிப்பும் உயர துவங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நல்ல நேரம் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திருமண பேச்சு வார்த்தைகள் நடக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உறவுகளோடு வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. புரிதல் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். கொஞ்சம் நிதானமாக இருந்தால் இந்த வருடம் நிறைய நல்ல பலன்களை அனுபவிக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் சந்தோசம் பிறக்கக்கூடிய வருகமாக இருக்கப் போகிறது. கவலைகள் துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். காரணம் அஷ்டம சனியின் நிறைவு காலம். இது நாள் வரை நீங்கள் கடந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். திருமணம் கைகூடும். குடும்ப பிரச்சினைகள் சரி ஆகும். ஆனால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் இந்த வருடம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தவே கூடாது. நிதிநிலைமை மேலோங்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தடைப்பட்ட திருமணம் நடக்கும் சந்தோஷம் பிறக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் எதிர்பாராத நல்லது நடக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போனாலும் பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பு இருக்கும். மன உறுதி அதிகரிக்கும். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனம் செலுத்தவும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. முதலில் கடன் வாங்குவது உங்களுக்கு பிரச்சனைகளை கொடுக்கும். அதிலும் அதிக வட்டிக்கு கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை வரவும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை. உறவுகளோடு அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபம் வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடம். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி காத்துக்கொண்டிருக்கிறது. தலை குனிந்த இடத்தில் எல்லாம் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூடும். சாதாரணமாக இருப்பவர்கள் கூட ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் பிரபல்யமானவர்களாக மாறிவிடுவீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் முழுவதும் வண்டி ஓட்டும் போது ஹெட்போன் போடாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக் கூடாது. மற்றபடி இந்த வருடம் உங்களுக்கு நல்ல வருடம் தான்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மகிழ்ச்சிகள் நிறைந்ததாக தான் இருக்க போகின்றது. வாழ்வில் வளமான முன்னேற்றங்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். வருமானத்திற்கு பிரச்சினைகள் வராது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். நீயா நானா என்ற போட்டிகளை போட வேண்டாம். மற்றபடி முன்னேற்றத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வருடம் தேவையில்லாத டென்ஷன்கள் எல்லாம் தானாக விளக துவங்கும். கொஞ்சம் மன நிம்மதியை அடைவீர்கள். இதுநாள் வரை தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். இன்பமான சூழலை அனுபவிப்பீர்கள். இத்தனை நாள்பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் நிச்சயம் நல்ல வெற்றி கிடைக்கப் போகிறது. பிரச்சனைகள் வந்தாலும் சோர்வடையாமல் மனம் தரளராமல் உங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டே செல்லுங்கள். இறைவன் உங்கள் பக்கம் இருக்கின்றான். சோதனைக்கு பிறகு நிச்சயம் உங்களுக்கு சாதனை காத்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக வண்டி வாங்க, வீடு நிலம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் பொறுமையும் நிதானமும் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். புது சொத்து சுகம் வாங்குவீர்கள். நிறைய நல்லது நடக்கும். ஆனால் எல்லா நல்லதும் ஒரு பிரச்சனையில் முடிய, உங்கள் முன்கோபம் காரணமாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே முன்கோபத்தை குறைக்கணும், மேலதிகாரிகளுக்கு மதிப்பு கொடுக்கணும், வயதில் மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும். நிதானம் உங்களுக்கு இந்த வருடம் நிம்மதியை கொடுக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் எதிர்ப்பார்த்ததை விட நல்லது கொஞ்சம் குறைவாக நடக்கும். ஆனால் அதற்காக முயற்சிகளை கைவிடாதீர்கள். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சந்தோஷம் நிறைந்த வருடமாக தான் இருக்கும். ஆனால் அவ்வப்போது சின்ன சின்ன ஏமாற்றங்களும் சின்ன சின்ன பிரச்சனைகளும் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தால் கடினமாக உழைக்க வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. சின்ன சின்ன அலட்சியங்கள் உங்களுடைய சந்தோஷத்தை நிலை குலைத்து விடும் ஜாக்கிரதை. மூன்றாவது நபர் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. அமைதியாக இருங்கள். சந்தோஷமாக பேசுங்கள், முன்கோபத்தை குறைக்க வேண்டும் உழைப்பை முதலீடாக போட வேண்டும். இதுதான் இந்த வருடத்தில் உங்களுக்கான பாடம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வருடமாக தான் இருக்க போகிறது. டென்ஷனாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நீங்கள் தான் பொறுத்து செல்ல வேண்டும். இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வேகத்தை விட விவேகத்தோடு செயல்பட வேண்டும். மற்றபடி நிதிநிலைமை சீராக தான் இருக்கும். இந்த வேலை இல்லை என்றால், அடுத்த வேலை கிடைக்கும். ஆனால் அலைச்சலும் டென்ஷனும் கூடும். ஆகவே பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளோடு பொறுமையாக பேச வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை காட்ட வேண்டும். ‌

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிறைய புது அனுபவங்கள் கிடைக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை அனுபவரீதியாக கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் உழைப்புக்கு ஏற்ற பலனை கடவுள் உங்களுக்கு கொடுப்பான். வியாபாரத்தில் இருந்து வந்த சறுக்கல்களை சரி கட்டி தேவையான லாபத்தையும் கொடுப்பான். நிறைய வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். அதனால் அலைச்சலும் ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்ல வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளரக்கூடாது. மனம் குறுக்குப் பாதையில் தவறான வழியில் செல்ல விடக்கூடாது. நேர்மையாக இருங்கள். தவறான பழக்கத்திற்கு ஆகிவிடக் கூடாது. நிச்சயம் உங்களுக்கு இந்த வருடம் நல்லது நடக்கும். விடா முயற்சி மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் விஸ்வரூப வெற்றி தரும்.

சற்று முன்