வருடங்கள் கடந்து செல்ல செல்ல, நம்முடைய வாழ்க்கை சூழலும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியும் மற்ற பல வளர்ச்சிகளும், நமக்கு நன்மையை செய்தாலும், இந்த கலியுகத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் மனிதர்களுக்கு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த 2025 வது வருடம் நம்முடைய தலையில் அந்த ஆண்டவன் என்ன விதியை எழுதி வைத்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. கடவுளின் ஆசிர்வாதத்தால் வரப்போகும் புது வருடத்தில் அனைவருக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.
நல்லதே நடந்தாலும் இறைவனை ஒருபோதும் மறக்க கூடாது. இறைவனின் பாதத்தை இறுக்கமாக பற்றி கொள்ளும்போது, அந்த இறைவனின் நாமத்தை திரும்பத் திரும்பச் சொல்லும் போது, விதியின் பயனால் ஏதாவது கெடுதல் நடப்பது போல இருந்தாலும், நம்முடைய தலைவிதி நிச்சயம் நல்லபடியாக எழுதப்படும். இந்த 2025ல் கிரகச்சாரத்தின் அடிப்படையில் நாம் தினமும் எந்த இறைவனை வழிபாடு செய்ய வேண்டும், பிரபல ஜோதிடர் ஒருவரால் சொல்லப்பட்ட ஒரு எளிமையான சிறப்பான வழிபாட்டு முறையை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
2025ல் நல்லது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த வருடம் முழுவதும் உங்களுடைய வாழ்வில் கஷ்டமே வரக்கூடாது என்றால், நீங்கள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். பிரச்சனைகள் என்றாலே அது ராகு கேதுவின் கைப்பிடியில் தான் இருக்கிறது. இந்த கலியுகம் ராகு கேதுவின் ஆதிக்கத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் அந்த கிரகங்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அந்த கிரகங்கள் நமக்கு நன்மையை செய்ய வேண்டும் என்றால், தினசரி விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் ‘ஓம் தருண கணபதியே நமஹ’ என்று சொல்லி விநாயகரை வழிபட துவங்குங்கள்.
அடுத்த வருடம் முழுவதும் தினமும் காலை எழுந்து விநாயகரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். மறுபடியும் இரவு தூங்கும் போது ‘ஓம் தருண கணபதியே நமஹ’ என்று சொல்லிவிட்டு தூங்குங்கள் இதில் என்ன கஷ்டம் இருக்கிறது.
உங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். முடிந்தவரை விநாயகரை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் முழுவதும் நீங்கள் விநாயகர் வழிபாடு செய்துவர உங்கள் வாழ்வில் துன்பம் பெரிய அளவில் வந்து உங்களை வாட்டி வதைக்காது. அதன் பிறகு செய்ய வேண்டிய வழிபாடு சிவ வழிபாடு.
கைபேசியை எடுத்து காதில் வைத்து ஹலோ சொல்லாதீங்க. ‘சிவசிவ’ சொல்லுங்கள். ‘சிவ சிதம்பரம்’ என்று சொல்லுங்கள். இரண்டு கைகளையும் கூப்பி அடுத்தவர்களை பார்த்து வணக்கம் சொல்லும்போது, ‘சிவ சிதம்பரம்’ சொல்லுங்கள். சிவசிவ சொல்லுங்கள். உங்கள் எதிரே நிற்பவர்களும் அதே வார்த்தையை திரும்பவும் சொல்லுவார்களா.
இப்படி நீங்கள் இந்த சிவ மந்திரத்தை சொல்லும் போதும், சிவசிதம்பரம் என்ற வார்த்தையை சொல்லும்போது உங்களுக்கு அபரிவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது நமக்கு பத்து மடங்கு பலன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மந்திரத்தை அடுத்தவர்களது வாயால் உச்சரிக்க வைத்து, அந்த மந்திரத்தை நாம் கேட்கும் போது 100 மடங்கு பலன் தரும் என்று சொல்லுவார்கள்.
இந்த டிசம்பர் மாதம் முடிந்து, ஜனவரி மாதம் துவங்கும், இந்த தருணத்தில் மேலே சொன்ன இந்த வழிபாட்டு முறைகளையும், மந்திரஜெபத்தையும் நீங்கள் பின்பற்ற துவங்குங்கள். இந்த மார்கழியில், இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் துவங்கும் போது உங்கள் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகள் நடக்கும். எவ்வளவு பெரிய துன்பம் இந்த பூலோகத்தில் பரவி வந்தாலும் சரி, உங்களுடைய வாழ்வு தனி சிறப்பு வாய்ந்த வாழ்வாக அமையும்.
இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் குபேர ஏகாதசி பரிகாரம்
உங்களுடைய வாழ்க்கையில் கிரகங்களின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இறைவனை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட்டது இல்லை. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.