2025 ஆம் வருடம் பிறந்து விட்டது. இந்த வருடம் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அப்போது கந்த கடவுளை நாம் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும். கந்த கடவுளின் கால்களை இறுக்கப்பற்றிக் கொள்ள வேண்டும். கந்தனின் கருணையால் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் விலகி செல்லும். செவ்வாயின் ஆதிக்கத்தோடு பிறந்திருக்கும் இந்த வருடத்தின் முதல் நாளில் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு, இந்த வருடம் முழுவதும் நாம் படிக்க வேண்டிய முருகன் பாடல், இவைகளைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
2025 இல் முருகன் வழிபாடு
செவ்வாயின் ஆதிக்கம் என்றாலே அதற்குரிய கடவுள் முருகப்பெருமான்தான். இன்று ஜனவரி மாதம் முதல் தேதி. இந்த வருட துவக்கத்தை நீங்கள் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடை செய்து துவங்குவது சிறப்பான பலனை கொடுக்கும். ஒன்றுமே வேண்டாம். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு இன்று மாலை செல்லுங்கள்.
உங்களால் முடிந்த பூ பழம் வாங்கி முருகப்பெருமானுக்கு எடுத்துச் செல்லுங்கள். இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனை “ஓம் சரவணபவ” மந்திரத்தை சொல்லி 6 முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கொண்டு, அந்த வேலுக்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை கந்த கடவுளிடம் வைத்தாலே போதும்.
“இந்த வருடம் முழுவதும் நீ எனக்கு வாழ்க்கையில் துணையாக வர வேண்டும். நீதான் துணை, நீ மட்டும் தான் துணை” வேறு எதுவும் எனக்கு தெரியாது, என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த கோவிலிலேயே அமர்ந்து “சுப்பிரமணிய புஜங்கம்” பாடல் வரிகளை படியுங்கள். மொத்தமாக படிக்க முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பாடல்களை வரிசையாக படித்து வர வேண்டும்.
இன்று முருகன் கோவிலில் அமர்ந்து சுப்பிரமணிய புஜங்கத்திலிருந்து ஒரு பாடலை படியுங்கள். முதல் பாடலை படியுங்கள். இந்த வருடம் முழுவதும் தினமும் ஒரு சுப்பிரமணிய புஜங்கம் பாடலை படித்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்ட ஒரு எளிய வழிபாட்டு முறை தான் இது.
சுப்பிரமணிய புஜங்கம் தமிழிலேயே கூகுளில் டைப் செய்தால் உங்களுக்கு வந்து விடும். உங்களால் இந்தப் பாடலை படிக்க முடியாது என்றாலும் பரவாயில்லை. தினமும் ஒரு முறை வண்டியில் போகும்போது வீட்டில் இருக்கும்போது நேரம் கிடைக்கும்போது இதை கைபேசியில் ஒலிக்க விட்டு காதால் கேட்டுக்கொள்ளுங்கள் போதும். கந்தக் கடவுள் உங்களுடனே இருப்பான்.
இதையும் படிக்கலாமே: ஜனவரி ஒன்று குலதெய்வ வழிபாடு
அது மட்டுமில்லாமல் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த பூமியில் கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், முருகனை வழிபாடு செய்வது மட்டுமே ஒரே வழி என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.