உங்கள் நட்சத்திரப்படி அதிஷ்டங்கள் சேர இன்று இந்த தெய்வத்தை வணங்குங்கள்

lakshmi
- Advertisement -

சூரியனின் வெம்மை பூமியின் மீது அதிகமாக வெளிப்படும் ஒரு மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போது சித்திரை மாதம் பல தெய்வீக தினங்களை கொண்டதாக இருக்கிறது. இந்த சித்தரை மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான தினம் தான் அட்சய திருதியை தினம். மங்களகரமான இந்த தினத்தில் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

lakshmi

சித்திரை மாசம் அமாவாசை திதி முடிந்து, மூன்றாவது தின தினமாக வருவது தான் அட்சய திருதியை தினமாகும். இறை வழிபாடு மற்றும் தான தர்மங்களை இந்த புனிதமான தினத்தில் செய்வதால் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல மடங்கு நன்மைகளை தரும். அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் கீழ்க்கண்ட தெய்வங்களை வழிபாடு செய்வதால் வாழ்வில் சிறப்பான நன்மைகளை பெறலாம். காலையில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் மாலையில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி வணங்க அனைத்திலும் வெற்றி கிட்டும்.

Vinayagar

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று திருமால் ரங்கநாதராக வீற்றிருக்கும் கோயில்களுக்கு சென்று, ரங்கநாதருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது வாழ்வில் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

அட்சய திருதியை தினத்தன்று ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திரசேகரராக இருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்வது சாலச் சிறந்ததாகும்.

sivan

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

- Advertisement -

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று பைரவ மூர்த்திக்கு செந்நிற மலர்களை சாற்றி, தீபமேற்றி வழிபடுவதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

kaala bairavar

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மகான் ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.

அட்சய திருதியை தினத்தன்று பூசம், விசாகம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

Perumal

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் வாழ்வில் சுபிட்சங்கள் பெருகும்.

உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவதால் குறையில்லாத வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 27 nakshatra worship in Tamil. It is also called as 27 natchathira valipadu in Tamil or Akshaya thiruthiyai in Tamil or Chithirai matham in Tamil or Natchathira valipadu in Tamil.

- Advertisement -