மகரத்தில் இடம் பெயர்ந்த செவ்வாய் பகவான்! இந்த 3 கிரக சேர்க்கை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் தரப்போகிறது தெரியுமா?

nava-graham-astro
- Advertisement -

சில சமயங்களில் ஒரே ராசியில் 2, 3, 4 என்று கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றன. இப்படி இரண்டுக்கும் மேற்பட்ட கிரக சேர்க்கை ஒரு ராசியில் நிகழும் பொழுது 12 ராசிக்காரர்களில் சிலருக்கு அதிர்ஷ்டமும், சிலருக்கு துரதிர்ஷ்டமும் உண்டாகும். அந்த வகையில் நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் செவ்வாய் பகவான் இன்று தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்து இருக்கிறார். எனவே மகர ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் புதன் பகவானுடன் செவ்வாயும் இணைகிறார். இதனால் கிடைக்கக் கூடிய சுப மற்றும் அசுப பலன்களை 12 ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ள இந்த பதிவு!

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து பத்தாமிடத்தில் மூன்று கிரக சேர்க்கை நடைபெற்று உள்ளதால் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கையானது ஒன்பதாமிடத்தில் நடைபெற்று இருப்பதால் தாயின் உடல்நலத்தில் இருந்து வந்த குறைகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும் குழப்பங்கள் கொஞ்ச காலம் தொடர்ந்து நீடிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து எட்டாமிடத்தில் மூன்று கிரக சேர்க்கை அமைந்துள்ளது எனவே நீங்கள் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். பேசும் வார்த்தையில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும், இதனால் எப்போதும் ஒருவிதமான டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை ஏழாமிடத்தில் நிகழ்ந்துள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் தானாகவே கைகூடி வரும் யோகமுண்டு. வரக்கூடிய செலவுகளை சுப விரயங்கள் ஆக மாற்றிக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனத்தில் உள்ளது. கிரஹ சேர்க்கையால் தந்தையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ஆறாமிடத்தில் கிரக சேர்க்கை அமைந்துள்ளதால் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். குடும்பத்தின் மீது அக்கறையும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மூன்று கிரக சேர்க்கையால் வெற்றிகள் குவியும். குறிப்பாக இளம் வயது மாணவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ரெண்டு பட்ட குடும்பம் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெறும் என்று கூறி விட முடியாது எனவே வருவது வரட்டும் என்று இருங்கள். நண்பர்கள் மூலம் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மூலம் மாற்றங்களை சந்திக்க நேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மூலம் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து மன உளைச்சல் நீங்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் இருந்து வந்த குறைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. வேகம் விவேகம் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மூலம் லாபம் அதிகரிக்க கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் ரீதியான பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய கோபத்தை அடக்குவது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூல பலன் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் போகிறது. ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு ஒற்றுமையை கொடுக்க இருக்கிறது. குடும்ப பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரிகளுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனவே நிதானத்துடன் இருப்பது நல்லது.

- Advertisement -