இந்த 3 இலை போதும். 3 மாதங்களில் உங்கள் முடி, முட்டி கால் தொடும் அளவிற்கு கடகடன்னு வளர்ந்திடும்.

hair-growth-sembaruthi
- Advertisement -

படு வேகமாக முடி வளர வேண்டும் என்றால் இந்த ஹேர் பேக் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மந்திரம் போட்டது போல நம்மால் நம்முடைய முடியை கடகடன்னு வளர செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். செயற்கையான முறையில் ட்ரீட்மென்ட் எடுப்பவர்களுக்கு கூட முடி வளர்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும். அப்படி இருக்கும் போது, இயற்கையான பொருட்களை வைத்தே எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் முடியை வளர வைக்க வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் பொறுமை காக்கத்தான் வேண்டும். 3 மாதங்களுக்கு இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து வாரத்தில் 2 நாள் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய முடி வளர்வதில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.

koyya-ilai

இந்த ஹேர் பேக்குக்கு நாம் பயன்படுத்த போகும் 3 இலைகள். கொய்யா இலை, செம்பருத்தி இலை, முருங்கை இலை. அதுதான் முருங்கைக்கீரை. 4 லிருந்து 5 கொய்யா இலைகள் எடுத்துக்கொள்ளுங்கள். 7 லிருந்து 10 செம்பருத்தி இலைகள் எடுத்துக் கொள்ளுங்கள். 1 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை எடுத்து கொள்ளுங்கள். இந்த எல்லா இலைகளையும் தண்ணீரில் போட்டு முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த இலைகளை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஹேர் பேக் கட்டியாக இருக்கக்கூடாது. கொஞ்சம் தண்ணீராக ஆக இருக்க வேண்டும். அப்போது தான் ஸ்கால்ப்பில் நன்றாக உள்ளே இறங்கி உடனடி பலனை கொடுக்கும்.

sembaruthi

அரைத்த இந்த ஹேர் பேக்கை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த ‘க்ரீன் லிக்விட் ஹேர் பேக்’, உங்களுடைய தலை பகுதியில், மயிர் கால்களில் படும்படி முதலில் போட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த ஹேர் பேக்கை தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு ஷாம்பு, சீயக்காய் போட்டுக் குளித்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் வெறும் தலைக்கு குளித்தாலும் சரி, உங்களுடைய தலை முடியில் நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கும்.

- Advertisement -

செலவே இல்லாமல் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய, செடியிலிருந்து இந்த இலைகளை எடுத்து பயன்படுத்தினால் போதும். இதோடு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

combing-hair

நிறைய தண்ணீர் பருகுங்கள். குறிப்பாக முடி கொட்டுது என்று கவலை பட வேண்டாம். இந்த ஹர்க ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் தெரியும்.

- Advertisement -