இந்த 3 விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். 3 தலைமுறைக்கு தேவையான பணம் சொத்து சுகத்தை நீங்களே சம்பாதித்து விடுவீர்கள்.

gaja-lakshm
- Advertisement -

மூன்று தலைமுறைகளும் நம் பெயரை சொல்லும் அளவிற்கு சொத்து சுகம் சேர்த்து வைத்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம்முடைய சந்ததியினர் நாம் கட்டிய வீட்டில் வாழ்ந்தாலே அது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம் தான். ஆனால் நேற்று நம்முடைய அப்பா சம்பாதித்த வீட்டை இன்று நம்மால் பாதுகாக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது மூன்று தலைமுறைக்கு நம்முடைய சொத்து சுகம் அழியாமல், நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணத்தை பராமரிப்பது என்றால் பெரிய கஷ்டப்படக் கூடிய விஷயம் அல்ல. பணத்தை உங்கள் கையில் வாங்கும் போது அதை எப்படி வாங்க வேண்டும். அந்த பணத்தை பணப்பெட்டியில் வைக்கும்போது எப்படி வைக்க வேண்டும். என்பதை பற்றிய சின்ன சின்ன 3 விஷயங்களை தெரிந்து கொண்டாலே பணத்தை சுலபமாக நம் வசியம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறைக்கும் செல்வச்செழிப்பு உங்களிடமே தங்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த மூன்று விஷயத்தை நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

முதல் விஷயம் உங்களுடைய கைகளில் யார் பணத்தை கொடுத்தாலும் அதை நீங்கள் வாங்கும் போது, பணத்தை உங்கள் கையில் பெற்றுக்கொண்ட பிறகு அந்த பணத்தை உங்களுடைய இரண்டு கண்களிலும் ஒற்றி வணங்கி கொள்ளுங்கள். கோவில் பிரசாதம் கொடுத்தால் கண்களில் ஒத்தி எடுப்போம் அல்லவா அதே மாதிரிதான்.

இரண்டாவதாக கையில் வாங்கிய பணத்தை பர்சில் வைப்பதாக இருந்தாலும், பீரோவில் வைப்பதாக இருந்தாலும், கல்லாப்பெட்டியில் வைப்பதாக இருந்தாலும், உண்டியலில் போடுவதாக இருந்தாலும் வங்கி கணக்கில் சேர்ப்பதாக இருந்தாலும் ‘லாபம் வசி வசி’ என்ற வார்த்தையை ஒரு முறை சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இந்த வார்த்தையை சொல்லும் போது அந்தப் பணம் நம்மிடமே வசியமாகி நிலையாகத் தங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்தபடியாக பணம் வைக்கும் இடம் எப்போதும் வாசனை நிறைந்த இடமாக இருக்கவேண்டும். அந்த இடத்தில் துர்நாற்றத்திற்கு இடமே இருக்கக் கூடாது. எப்போவுமே மூடி வைத்திருக்கும் ஒரு பெட்டியில் ஒரு வாடை வீச தான் செய்யும். அந்த வாடை வராமல் தடுப்பதற்கு ஏதாவது ஒரு நறுமணம் நிறைந்த பொருளை அந்த பணப்பெட்டியில் வையுங்கள்.

ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் இப்படி உங்கள் வீட்டில் எந்த பொருள் இருக்கின்றதோ அந்த பொருளை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து அந்த இடத்தை வாசமாக வைத்துக்கொள்ளுங்கள். (இப்படி ஏதாவது 1 பொருளை வைத்தால் போதும்.) அதேசமயம் பணம் வைக்கும் இடத்தை மொத்தமாக பணம் இல்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க கூடாது. 1 ரூபாய் நாணயத்தையாவது மிச்சம் வைத்து விட்டு, மீதம் இருக்கும் பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள். மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். பணம் உங்களிடம் பல தலைமுறைகளுக்கு தங்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -