இப்போது தமிழ் மாதத்தில், ஆனி மாதமானது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தைப் பற்றிய சிறப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனி மாதம் பூரம் நட்சத்திரம் எப்போது வருகிறது. இந்த நாளில் எந்தக் கடவுளை வழிபாடு செய்தால் நம்முடைய கடன் சுமையிலிருந்து வெளிவரலாம். வாழ்நாள் துன்பங்கள் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன. ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
ஆனி மாதம், 16ஆம் தேதி, அதாவது ஆங்கில தேதியின் படி 30.6.2025 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு பிறகு பூரம் நட்சத்திரம் துவங்குகிறது. 1.7.2025 செவ்வாய் கிழமை மதியம் 12:33 வரை பூரம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கடன் தீர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஆனி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் லட்சுமி நரசிம்மரை எவர் ஒருவர் வழிபாடு செய்து பிரார்த்தனை வைத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கும் வாழ்நாள் துன்பங்கள் நீங்கும். முக்கியமாக இந்த கலியுகத்தில் நம்மை வாட்டி வதைப்பது கடன் சுமை தான். உங்களுக்கு தீரா கடன் சுமை இருக்கிறது என்றால், குகையில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், மலைமேல் இருக்கும் லட்சுமி நரசிம்மரை, ஆனி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று சென்று வழிபாடு செய்து விடுங்கள் போதும்.
வாழ்நாள் கடன் கூட சீக்கிரம் அடையும். ஆமாங்க அதிசக்தி வாய்ந்த நாள் இது. இப்படி குகைக்குள் இருக்கும் நரசிம்மர், மலை மேல் இருக்கும் நரசிம்மரை சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டு பக்கத்தில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகம் நெய்வேதியம் வைத்து அவருக்கு வாசனை நிறைந்த புஷ்பங்களை வாங்கி கொடுத்து, இரண்டு மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உங்களுடைய துன்பங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.
அதேபோல உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும், இந்த நாளில் லட்சுமி நரசிம்மரை வேண்டி விரதம் இருந்து, பிரார்த்தனை செய்யலாம். நிச்சயமாக அடுத்த வருடம் ஆனி மாதத்திற்குள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தை வழங்கும் வாராகி வழிபாடு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த கோவில்களுக்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சரி, பெருமாள் கோவிலில், லட்சுமி நரசிம்மர் இருப்பார் அவரை போயாவது கட்டாயம் வழிபாடு செய்யுங்க. இந்த நாளை யாரும் தவற விடாதிகள். வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ இந்த நாளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது அதி சிறப்பான பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.