நாளை 4-1-2025 ஆம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை பஞ்சமி திதி இருக்கிறது. சனிக்கிழமை முழுவதும் பஞ்சமி திதி இருப்பதால் அந்த நாள் முழுவதும் வாராகியை மனதார நினைத்துக் கொண்டே வாராகி நாமத்தை சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் அந்த வாராகியின் அருள் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் வந்திருக்கும் அற்புதம் வாய்ந்த இந்த வளர்பிறை பஞ்சமி திதியில் அந்த வாராகியின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால், எந்த முறையில் வீட்டிலிருந்தபடியே வாராகி வழிபாடு செய்வது, எந்த பாடலை படித்தால் அவள் விரும்பி நம் வீட்டிற்கு ஓடோடி வந்து வரம் கொடுத்து விடுவாள் தெரியுமா உங்களுக்கு, எந்த பாடலை படித்தால் வீட்டில் தங்கி இருக்கும் கெட்ட சக்திகள் எல்லாம் தெரித்து ஓடிவிடும், வீட்டில் வாராகியை நிரந்தரமாக குடி வைக்க நாம் பாட வேண்டிய அந்த பாடல் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இது மார்கழி மாதத்தில் வந்திருக்கும் வளர்பிறை பஞ்சமி திதி என்பதால் நீங்கள் நாளைய தினம் சனிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராகி தாயே எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று மனமுருக வேண்டி, இந்த பாடலை படிக்கலாம்.
காலை நேரத்தில் எங்களுக்கு நேரமில்லை வழிபாடு செய்ய முடியாது என்பவர்கள், மாலை 6 மணிக்கு மேலாக இரவு 10 மணிக்குள்ளாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கலாம். பூஜை அறையில் எப்பவும் ஏற்றி வைக்கக்கூடிய விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில் வாராகியின் திருவுருவப் படம் இல்லை என்றாலும், இந்த பாடலை படிக்கலாம். வாராகியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
எங்கள் வீட்டில் வாராஹி தாயின் திரு உருவப்படம் இருக்கிறது. நான் வளர்பிறை பஞ்சமி திதியும், தேய்பிறை பஞ்சமி திதியும் அவளுக்கு உண்டான வழிபாட்டு முறைகளை தவறாமல் செய்து வருகின்றேன் என்று சொல்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பாடலை படிப்பவர்கள் நெஞ்சிலும் வீட்டிலும் வாராகி குடி கொள்வாள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாளைய தினம் நீங்கள் படிக்க வேண்டிய பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
வராகி பாடல் வரிகள்
ஓம் ரிண ருண விமோசன துஷ்ட நாசினி வாராகி வருக
ஓம் பூமி தானேஸ்வரி வருக
ஓம் வார்தாளி வார்தாளி வாராகி வருக
ஓம் ரிண விமோசன வஜ்சிரகோச வாராகி வருக
ஓம் பன்றி முகம் கொண்டவை வாராகி வருக
ஓம் படைகள் கைப்பற்றின வெற்றி நாயகியே வருக
ஓம் சேனாதிபதி தாயே வருக
ஓம் பிரமாண்ட நாயகியே வருக
ஓம் மங்களரூபி மங்களம் மங்களாம்பிகையே வருக.
எல்லோருக்கும் எல்லா மங்களம் பெருக வருக தருக அருள்க
இந்த பாடலை ஒரே ஒருமுறை படித்தால் கூட போதும். அதிகபட்சம் உங்களால் எத்தனை முறை படிக்க முடியுமோ படிக்கலாம். அதில் எந்த தவறும் கிடையாது. பாடலை படித்து முடித்துவிட்டு உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன வரம் எல்லாம் தேவையோ, வளர்பிறை நிலவு போல உங்கள் வாழ்க்கை வளர்ந்து கொண்டே செல்ல, என்னென்ன விஷயங்கள் தேவையோ அதையெல்லாம் நீங்கள் தாயிடம் கேட்கலாம்.
இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் பொருள்
நல்ல வேலை கிடைக்க வேண்டும், வருமானம் பெருக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும், நல்ல ஆரோக்கியம் வேண்டும், நோய் நொடி தீர வேண்டும் இப்படி என்ன கேட்டாலும் அந்த தாய் உங்கள் வரங்களை தட்டாமல் கொடுத்து விடுவாள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வாராகி ஆன்மீகம் பாடல் சமர்ப்பணம்.