- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval5-4-2025 அசோகா அஷ்டமி பரிகாரம்

5-4-2025 அசோகா அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

பங்குனி மாதம் அமாவாசை திதி முடிந்த பிறகு, வரக்கூடிய எட்டாவது நாள் வளர்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் நாம் ராமரையும் சீதையையும் நினைத்து இறைவழிபாடு செய்தால் நம்முடைய துன்பங்கள் விலகும். சந்தோஷம் படிப்படியாக உயரும் என்பது நம்பிக்கை. இந்த நாளுக்கு அப்படி என்ன விசேஷம் இருக்கிறது. ராமர் சீதைக்கும் இந்த அசோகா அஷ்டமிக்கும் என்ன சம்பந்தம்.

கிருஷ்ண பரமாத்மா அவதரித்த தினம் தான் அஷ்டமி. ராமர் அவதரித்த தினம் நவமி. இந்த அஷ்டமி திதியில் ராமரை வழிபாடு செய்யச் சொல்வதற்கு என்ன உள்நோக்கம் இருக்கும். இதை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

அசோகா அஷ்டமி வழிபாடு

சீதா தேவியை இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்தது, அசோகவனத்தில் தான். அசோகவனம் என்றால் மருதாணி செடி நிறைந்த வனம் என்று அர்த்தம். மருதாணிக்கு சமஸ்கிருதத்தில் அசோகா என்ற பெயரும் இருக்கிறது. சீதாதேவி அவர்கள் அசோகவனத்தில் கணவனைப் பிரிந்து, கஷ்டப்பட்டு துன்பத்தில் துயரத்தில் ஆழ்ந்திருந்த போது, இந்த மருதாணி செடிதான் தன்னுடைய இலைகளையும் பூக்களையும் சீதா தேவியின் மேல் உதிர வைத்து, அவர்களுக்கு ஆறுதல் சொன்னதாக புராணங்கள் கூறுகிறது.

ராமர், ராவணனோடு போர் புரிந்து சீதையை மீட்ட பிறகு, சீதாதேவி தனக்கு ஆறுதல் சொன்ன இந்த அசோக செடிகளுக்கு, அதாவது மருதாணி செடிகளுக்கு ஒரு வரத்தை கொடுத்ததாகவும் புராணங்கள் சொல்லி இருக்கிறது இது நம்மில் நிறைய பேருக்கு தெரியும்.

- Advertisement -

சீதாதேவி மருதாணி செடியை பார்த்து கேக்குறாங்க. “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். நான் தருகிறேன் என்று”. அதற்கு அந்த மருதாணி செடி என்ன சொன்னது தெரியுமா? “இதுபோல ஒரு துன்பம், சீதாதேவி வனவாசத்தில் அனுபவித்தது போல ஒரு துன்பம், வேறு ஒரு பெண்ணுக்கு வரவே கூடாது”. அதற்காக எனக்கு நீங்கள் வரம் அருள வேண்டும் என்று கேட்டதாம்.

சீத்தாதேவி அந்த மருதாணி செடிக்கு இந்த வரத்தை அளித்துள்ளார்கள். யார் இந்த மருதாணி இலைகளை பறித்து தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். அந்தப் பெண்களுக்கு மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் இந்த மருதாணியை கையில் வைத்துக் கொண்டால் கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியூன்யம் ஏற்படும். அதாவது ராமர் சீதையை போல, கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பது தான் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் அர்த்தம்.

- Advertisement -

அதனால் தான் வடமாநிலங்களில் திருமணத்திற்கு முன்பு மெஹந்தி விழா ஒன்று நடத்தப்படும். அது கணவன் மனைவி இறுதிவரை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அவர்கள் இந்த மருதாணிக்கு முக்கியமும் துவம் கொடுத்து, தங்களுடைய கையில் இட்டுக் கொள்வார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த மருதாணியை கையில் வைத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடந்த நாள், சீதாதேவி மருதாணி செடிக்கு இந்த வரத்தை கொடுத்த நாள் தான் பங்குனி மாத வளர்பிறை அஷ்டமி திதி. சோகம் என்றால், கவலை கஷ்டம் துன்பம் என்று அர்த்தம். அசோகம் என்றால் துன்பம் இல்லாத வாழ்க்கை என்று அர்த்தம். இப்போது புரிகிறதா இந்த அசோகா அஷ்டமிக்கு அர்த்தம். நாளை யார் ஒருவர் சீதையை நினைத்து மருதாணி இலையை தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்கிறீர்களோ அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.

கணவனை விட்டு ஆயுள் முழுவதும் பிரியாமல் வாழக்கூடிய பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் நாளைய தினம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணம் ஆகாத பெண்கள் கையில் மருதாணியை இட்டுக்கொண்டு நல்ல கணவர் அமைய பிரார்த்தனை வைக்கலாம். சரி இது மட்டுமல்லாமல் இன்னும் வேறு என்ன பரிகாரம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வரை செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த நாளில் மருதாணியை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கலாம். மருதாணி செடியை வீட்டில் நட்டு வளர்க்கலாம். வீட்டில் இடம் இல்லை என்றால் ஏதாவது கோவில்களிலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலும் மருதாணி செடியை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது, உங்களுடைய வீட்டிற்கு சுபிட்சத்தை தரும் என்று நம்பப்படுகிறது. உங்களுக்கும் மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்