இந்த 5 கிச்சன் ஹேக்ஸ் உங்களுக்கு தெரியுமா? இது தெரிஞ்சா நீங்களும் கிச்சன் ஸ்டார் தான்!

- Advertisement -

சமையல் செய்வதை விட சமையல் செய்வதில் இருக்கும் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் தான் சூட்சமம் இருக்கிறது. சிறு சிறு விஷயங்களில் தான் ஒரு சமையல் முழுமை பெறுகிறது. எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம் என்றால் சமையலில் எதையும் சாதிக்க முடியாது! இப்படித்தான் சமைக்க வேண்டும் என்கிற போது தான் சமையல் முழுமையான ருசி பெறுகிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த 5 விஷயங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் கில்லாடி தான். அது என்னென்ன? என்பதை இனி வரும் பத்திகளில் காணலாம் வாருங்கள்.

குறிப்பு 1:
சமையலுக்கு அரசியாக இருக்கும் ஒரு குழம்பு என்றால் அது சாம்பார் தான். வாரத்திற்கு எப்படியும் மூன்று நாள் சாம்பார் செய்வது வழக்கம். அப்படி சாம்பார் செய்யும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்தால் புளிப்பு சுவை குறைந்து ஓட்டலில் செய்வது போலவே ருசி மிகுந்ததாக மாறும். சாம்பார் இறக்கும் பொழுது சிறிதளவு நெய் அல்லது வெண்ணெயை விட்டு இறக்கி பாருங்கள். சாதாரண சாம்பார் ஹோட்டல் சாம்பார் போல சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
பூண்டுப்பல் உரிக்க அனைவருக்கும் சோம்பல் தனமாக இருக்கும். நகம் இல்லாதவர்களுக்கு பூண்டு உரிக்க இன்னும் சற்று சிரமமாகவே இருக்கும். எதுவுமே செய்யாமல் மிக சுலபமாக பூண்டு உரிக்க நல்ல வழி ஒன்று உண்டு. உங்களுக்கு தேவையான பூண்டுப் பற்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். அதில் சூடாக இருக்கும் தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் வைத்தால் போதும் பிறகு சூடு ஆறியதும் எடுத்து உரித்தால் சட்டென வந்து விடும்.

coconut1

குறிப்பு 3:
தேங்காய் ஓட்டில் இருந்து தேங்காய் பிரித்தெடுக்க சிலருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். உங்களுக்கு அவசரம் இல்லை என்றால் புதிதாக வாங்கி வந்த முழு தேங்காயை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்களுக்கு பிறகு தேங்காயை உடைத்து ஓட்டிலிருந்து தேங்காய் எடுக்க சுலபமாக வரும். அல்லது அரை மூடி தேங்காயை சிறிது நேரம் ஸ்டவ்வில் வைத்திருங்கள். பின்னர் சூடு ஆறியதும் எடுத்துப் பார்த்தால் ஓடு தனியாகவும், தேங்காய் தனியாகவும் சுலபமாக வந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
எல்லோருடைய வீட்டிலும் டீத்தூள் கண்டிப்பாக ஸ்டோர் செய்து வைத்திருப்போம். 100 கிராம் டீத்தூள் உடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ‘என்னது டீத்தூள் உடன் காபி தூளா?’ என்று முகத்தை சுளிக்க வேண்டாம். ஹோட்டலில் கொடுப்பது போலவே டீ கூடுதல் சுவையுடன் நிச்சயமாக சூப்பராக இருக்கும். ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் இதையே செய்வீர்கள்.

biscuit

குறிப்பு 5:
வாங்கிய பிஸ்கட்டுகளை நீண்ட நாட்களுக்கு அதே மொறுமொறுப்புடன் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். வாங்கி வந்த உடன் ஒரு ஏர் டைட் கண்டைனர் பாட்டிலில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து எல்லாக் பிஸ்கட்களையும் அதனுள் போட்டு டைட்டாக மூடி வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து எடுத்து பயன்படுத்தும் பொழுது எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதன் மொறுமொரு தன்மை குறையாது.

- Advertisement -