சஷ்டி விரத நாட்களோடு சேர்ந்து, இன்றைய தினம் வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. ஆக இன்று இரட்டிப்பு சந்தோஷம். முருகரையும் வழிபாடு செய்யலாம். வாராகி அன்னையையும் வழிபாடு செய்யலாம். நீங்கள் முருகர் சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி, மாலை முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது, கூடவே இந்த வாராகி அன்னையையும் மனதார நினைத்து, செல்வக் கடாட்சம் பெருக, குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீர பிரார்த்தனை வைத்தால், உங்களுடைய குடும்பத்தில் வறுமையானது விலகி, செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
இன்று மாலை வாராஹியை எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்வது. செல்வ வளத்தில் உயர எந்த மந்திரத்தை உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. உங்களுடைய வீட்டில் வாராகி திருவுருவப்படம், சிலை இருந்தால் அதற்கு உண்டான அபிஷேக அலங்காரங்களை சரியாக செய்து முடித்துவிட்டு, வாராகிக்கு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெயோ, நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
வராகிக்கு பிரசாதமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தாலும் போதும். பிறகு உங்களுடைய வேண்டுதலை வாராகித் தாயிடம் நம்பிக்கையோடு வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் வாராகியின் திருவுருவப்படம் இல்லை என்றாலும், நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடர் தான் வாராகி என்று முழுமையாக நம்புங்கள். எங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் பல மடங்கு உயர வேண்டும், மேலும் மேலும் பணம் நகை தங்கம் எல்லாம் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.
ஆசைக்கு அளவு கிடையாது. அதற்காக பேராசைப்படக்கூடாது. தகுதிக்கு மீறி வாரங்களை கடவுளிடம் கேட்கக் கூடாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய தினம் நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது வளர்பிறை நிலவு போல வளர்ந்து கொண்டே செல்லும். இன்று வளர்பிறை பஞ்சமி திதி அல்லவா. ஆகவே உங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என்னென்ன தேவையோ அதை எல்லாம் அந்த தாயிடம் மனம் உருகி கேளுங்கள்.
பிறகு இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து உங்களுடைய வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளலாம். வரகிற்கு வைத்த பிரசாதத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான் வழிபாடு. இந்த எளிமையான வழிபாடும் மந்திரமும் இன்று உங்களுக்கு வாராகியின் அருளை வளம் பெற பெற்று தரும். இன்றைக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன சொல்லவே இல்லையே. இன்று மாலை பூஜை அறையில் உச்சரிக்க வேண்டிய வாராகி மந்திரம் இதோ.
ஐஸ்வர்யம் தரும்வாராகி மந்திரம்
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம :
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி-ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி விரதம் 5வது நாள் வேல் வழிபாடு
மந்திரம் எளிமையாக உச்சரிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள். வீட்டு பக்கத்தில் வாராகி சன்னிதானம் இருந்தால் அங்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். கோவிலில் அந்த அம்மனின் முன்பு அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம். பல மடங்கு பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.