கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. இந்த வளர்பிறை நிலவு போல நம்முடைய வாழ்க்கையின், வளர்ச்சியும் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். முருகா என்று மனதார நினைத்து, நாளைய தினம் வரக்கூடிய கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி திதியில் இந்த பரிகாரத்தை எவர் ஒருவர் நம்பிக்கையோடு வீட்டில் செய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் அமோக வெற்றி கிடைக்கும்.
நிறைய பணம் சம்பாதிக்கும் யோகம் தானாக வீடு தேடி வரும். கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளுமே சிவபெருமானுக்கு உகந்த நாள். அந்த முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இந்த கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு விசேஷ நாட்களும் சிறப்பு தான். அந்த வகையில் நாளைய வளர்பிறை சஷ்டி திதியில், நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
வளர்பிறை சஷ்டி திதி வழிபாடு
நாளை வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உகந்த நாள். மகாலட்சுமிக்கு உகந்த நாளில் இந்த வளர்பிறை சஷ்டி திதி வந்திருப்பது சிறப்பு. நாளை காலை 11 மணிக்கு மேல் தான் சஷ்டி திதியானது பிறக்கவிருக்கிறது. நாளைய தினம் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை வரும். இந்த நேரத்தில் முருகர் வழிபாட்டை செய்வது நமக்கு பெரிய அளவில் பணப்பிரச்சனையை தீர்த்து வைக்கும். பண வரவை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
6.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பூஜை அறையை அலங்காரமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றிலையில் 1 ஸ்பூன் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் வெள்ளை மொச்சை வைத்து முருகப்பெருமானின் முன்பாக வைத்து விடுங்கள். பிறகு வழக்கம் போல உங்களுடைய வீட்டில் எப்படி சஷ்டி திதி வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அதேபோல பூஜைகளை செய்ய வேண்டும். வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து, பூ வெத்து அதற்கு ஒரு நெய்வேதியம் வைக்க வேண்டும்.
முருகர் திரு உருவப்படம் மட்டும் தான் இருக்கிறது என்றால், அந்த படத்தை துடைத்து செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து அதற்கு முன்பு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வெற்றிலையில் மொச்சை துவரம் பருப்பு வைத்திருக்கிறோம் அல்லவா. அந்த வெற்றிலையோடு எடுத்து அதை உங்கள் உள்ளம் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு பொருட்களும் ஒன்றாக சேர்ந்தால் தவறு கிடையாது. கையில் வெற்றிலையோடு சேர்ந்து இரண்டு தானியங்களும் இருக்கிறது அல்லவா, அதை அப்படியே வைத்துக் கொண்டு, முருகா என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும். வருமானம் பெருக வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
‘ஓம் ஷம் சரவண பவ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவேண்டும். இது கடன் தீர்க்கும் முருகனது மந்திரம். கையில் அந்த வெற்றிலையில் கட்டாயம் துவரம் பருப்பும் வெள்ளை மொச்சையும் இருக்க வேண்டும். வெள்ளை மொச்சை சுக்கிரனுக்கு உரியது. துவரம் பருப்பு முருகப் பெருமானுக்கு உரியது. வெற்றிலை வெற்றியை தரக்கூடியது.
இந்த மூன்று பொருட்களையும் கையில் வைத்துக்கொண்டு நாளைய தினம் முருகனது இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் உங்கள் பணக்கஷ்டம் நீங்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் யோகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு கையில் இருக்கும் வெற்றிலையை அப்படியே முருகனது பாதத்தில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை முழுவதும் இரவு முழுவதும் அது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
மறுநாள் சனிக்கிழமை எழுந்து மீண்டும் சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த பொருட்களை அப்படியே எடுத்து பசுமாட்டுத் தொட்டியில் போட்டு விடலாம், அல்லது காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். இவ்வளவுதான். இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமமே அந்த இரண்டு தானியங்கள் தான். நாளைய தினம் எல்லா நல்ல திதிகளும் சேர்ந்து இருக்கிறது. அந்த நேரத்தில் சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யும் போது பல மடங்கு பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.