- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval6-4-2025 நாளை சொல்ல வேண்டிய ராமநவமி மந்திரம்

6-4-2025 நாளை சொல்ல வேண்டிய ராமநவமி மந்திரம்

- Advertisement -

மகாவிஷ்ணு இந்த பூமியில் அவதரித்த நாளை தான் ராமநவமி விழாவாக கொண்டாடுகின்றோம். ராமர் பிறந்த இந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நாளில் ராமபிரானை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாள் துன்பங்கள் தீரும், தீராத நோய் நொடிகள் விலகும், இல்லறத்தில் சந்தோஷம் பெருகும் என்பதும் நம்பிக்கை.

நாளைய தினம் வரவிருக்கும் ராமநவமி நாளில் எளிமையான முறையில் ராமரை எப்படி வழிபாடு செய்வது எந்த மந்திரத்தைச் சொன்னால், கோடிமுறை ராமஜெபத்தை உச்சரித்த பலனை நம்மால் பெற முடியும் ஆன்மீகம் சார்ந்த சில எளிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

ராமநவமி 2025

நாளை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். ராமருக்கு நீர்மோர் பானகம், நெய்வேதியமாக வைத்து விட வேண்டும். இரண்டே இரண்டு துளசி இலைகளை ராமருக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை நடக்காத அதிசயங்கள் எல்லாம் இனிவரும் நாட்களில் நடக்க தொடங்கும்.

வெறும் வயிற்றில் நம்மை வருத்திக்கொண்டு ஒரு பூஜையை செய்யும் போது, நிச்சயமாக அதற்கு ஒரு பலன் இருக்கும். கஷ்டங்களை கடவுள் நமக்கு கொடுக்க வேண்டாம், நமக்கான கஷ்டத்தை நமக்கே குடுத்துக் கொண்டு, கடவுளை வழிபாடு செய்வோம். பிறகு கஷ்டங்கள் தானாக விலகும். நம்முடைய விதியின் பயனால் நம் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள் கூட நம்மை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் ராமர் வழிபாட்டை ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டும்.

- Advertisement -

ராமர் மந்திரம்

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முழு சக்தியையும் பெற்ற மந்திரம் இது. சிவன் பார்வதியால் சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரம் இது. நாளைய தினம் ராம பக்தர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய மந்திரங்களில் இதுவும் ஒன்று. இந்த மந்திரத்தை முடிந்தால் 108 முறை சொல்லி பாருங்கள். வாழ்நாள் துன்பங்கள் ஒரே நாளில் தீரும். அது மட்டுமில்லாமல் இராம நாமத்தை ஒரு கோடி முறை ஜெபித்த புண்ணியமும் உங்களை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை அஷ்டமி பைரவர் மந்திரம்

குடும்பத்தோடு அமர்ந்து நாளை பூஜை அறையில் ராம நாமத்தை சொல்லுவோம். ராமரின் பாதங்கள் பணிவோம். நேர்வழியில் நடப்போம். தர்மப் பாதையை உலகத்தில் பரப்புவோம். மன நிம்மதியை பெறுவோம் என்ற தகவல் உடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்