- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று 6-7-2025 ஆனி மாத வளர்பிறை ஏகாதேசி

இன்று 6-7-2025 ஆனி மாத வளர்பிறை ஏகாதேசி

- Advertisement -

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி திதி இந்த நாள் முழுவதும் இருக்கிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய அதிசக்தி வாய்ந்த ஒரு பெருமாள் வழிபாட்டை பற்றியும், அதிசக்தி வாய்ந்த ஒரு பெருமாள் பரிகாரத்தையும் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்றைய தினம் இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வாழ்வில் பணக்கஷ்டம் இருக்காது. மனகஷ்டம் இருக்காது. சொத்து சுகம் பணம் பதவி பெயர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு என்று எல்லாம் மேலும் மேலும் உயர இந்த சின்ன பரிகாரம் ஒரு நல்ல வழியை காட்டித் தரும்.

பணம் தரும் ஏகாதசி பரிகாரம்

இந்த பரிகாரத்தை இன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் செய்யுங்கள். இன்று மாலை கொஞ்சம் பச்சை கற்பூரம், கொஞ்சம் துளசி இலைகளும் கட்டாயம் தேவை. பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளிடம் ஆசி பெற்று அந்த பெருமாள் பாதத்தில் இருந்து, துளசி இலைகளை பிரசாதமாக வாங்கி வந்தால் இன்னும் அதிசிறப்பு. இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிக நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி பெருமாள் பாதத்தில் 7, ஒரு ரூபாய் நாணயங்களை வையுங்கள். ஏழுமலையானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இரண்டு உள்ளங்கைகளிலும் நன்றாக பச்சை கற்பூரத்தை தேய்த்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் சின்னதாக ஒரு பச்சை கற்பூர துண்டு, துளசி இலை, 7 ஒரு ரூபாய் நாணயம் பெருமாள் பாதத்தில் இருந்து எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, பெருமாளை நன்றாக பிரார்த்தனை செய்து, இந்த மந்திரத்தையும் ஏழுமுறை சொல்லிவிட்டு, அந்த நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, பூஜை அறையிலேயே பெருமாள் பாதத்தில் வைத்து விடுங்கள்.

பெருமாள் மந்திரம்

“ஓம் புரந்தராய நம”

- Advertisement -

முடிச்சை கையில் வைத்துக்கொண்டு, சொல்ல வேண்டிய பெருமாளின் மந்திரம் இதுதான். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த முடிச்சை கையில் வைத்துக்கொண்டு, பெருமாளிடம் ஏதோ ஒரு வேண்டுதலை வைத்திருப்பீர்கள் அல்லவா. குறிப்பிட்ட அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன், அந்த மஞ்சள் நிற முடிச்சில் கட்டி வைத்திருக்கும் ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை, திருப்பதி உண்டியலில் கொண்டு போய் செலுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: 7-7-25 நாளை, 777 அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச வசிய நாள்

அவ்வளவு தூரம் செல்ல முடியாது வாய்ப்பு இல்லை என்பவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவில் உண்டியலில் அந்த 7 ரூபாய் நாணயங்களை போட்டு விடுங்கள். இன்று எவர் ஒருவர் வேண்டுதல் வைத்து ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை மேல் சொன்னபடி முடிந்து, பூஜை அறையில் வைக்கிறீர்களோ, அவர்கள் வேண்டுதல் நிச்சயம் அடுத்த 7 நாட்களுக்குள் பலிக்கும். முயற்சி செய்து கொண்டே இருங்கள். 7 நாட்களுக்குள் நடக்கவில்லை என்றால் 7 மாதத்திற்குள் நிச்சயம் நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்