துர்க்கை அம்மனை வாரத்தின் 7 நாட்களிலும் இந்த முறைப்படி வழிபட்டால், வளமான வாழ்க்கையைப் பெற முடியும்.

durga-compressed
- Advertisement -

துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் மட்டும்தான் துர்க்கைஅம்மன் வழிபாட்டினை முறைப்படி செய்து வருகின்றோம். ஆனால் வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் துர்க்கை அம்மனை இந்த முறைப்படி வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

durga

கிரகங்களில் ராகு கேதுவினால் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமேயானால் துர்க்கை அம்மன் வழிபாடு மிகச் சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோஷங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துர்க்கையம்மனை முறையாக ஏழு நாட்களிலும் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஞாயிறு:
துர்க்கை அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை காட்டன் துணியில், நம் கையாலேயே திரியை தயாரித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமை பூஜை அன்று சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். துர்க்கை அம்மனை ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த முறைப்படி வழிபட்டு வந்தால், வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும். அனைத்து விதமான நலன்களை பெற்று சுபிட்சமாக வாழலாம்.

durgai amman

திங்கள்:
துர்க்கை அம்மனுக்கு திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் வெண்ணை காப்பு சாத்தி, வெண் பொங்கலை பிரசாதமாகப் படைக்க வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அது விரைவாக தீரும்.. என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களும் துர்க்கை அம்மனை திங்கட்கிழமைகளில் இந்த முறைப்படி வழிபட்டால் நல்ல பலன் உண்டு.

- Advertisement -

செவ்வாய்:
நம் எல்லோருக்கும் இந்த பரிகாரம் தெரிந்திருக்கலாம் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். தக்காளி சாதத்தை நைவேத்யமாக படைப்பது சிறந்தது. இதனால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு இல்லாதவருக்கு குழந்தை பேறு கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

durga-devi-amman

புதன்:
துர்க்கை அம்மனுக்கு புதன் கிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 மணிக்குள் நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றப்பட வேண்டும். புளி சாதம் நைவேத்யமாக படைத்து சிறப்பு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைப்பதற்கும் செய்யலாம். ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தீரும் என்பதும் ஐதீகம்.

- Advertisement -

வியாழன்:
வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் நல்லெண்ணை தீபம் ஏற்றி, எலுமிச்சைபழ சாதம் செய்து துர்கை அம்மனை வழிபட வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் அதிக லாபத்தை அடையலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

durga

வெள்ளி:
வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரம் ஆன 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். நெய் தீபமும் ஏற்றலாம். பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தேங்காய் சாதம் அல்லது பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யமாக படைத்து சிறப்பான ஒன்று. நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது.

சனி:
துர்க்கையம்மனுக்கு சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30  மணிக்குள் மஞ்சள் திரியில் விளக்கு ஏற்றப்பட வேண்டும். இந்த திரியை நீங்களே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம். சிறிதளவு மஞ்சள் பொடியை எடுத்து வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தினால் மஞ்சள் திரி தயாராகிவிடும். காய் கலந்த சாதத்தை அம்மனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் விரைவாக தீர்ப்பதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். வேலை இல்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்க சனிக்கிழமை தோறும் இந்த முறைப்படி துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக கோளாறு தீரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

durga

இவ்வாறாக உங்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றதோ அது தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அதற்கு உகந்த கிழமையில் 11 வாரம் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனைப் பெற முடியும். தீபத்தை மண் அகல் தீபத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம்.  அதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு வழிபாடும் பொய்யானதாக சரித்திரமே இல்லை.

இதையும் படிக்கலாமே
பணத்தை ஈர்க்கும் இந்த 4 பொருட்களையும், ஒன்றாக சேர்த்து எப்படி வைத்தால், வீட்டிற்குள் பணம் வந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Durgai amman in Tamil. Durgai amman valipadu in Tamil. Durgai amman pooja in Tamil. Durgai amman valipadu muraigal in Tamil.

- Advertisement -