- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval8-10-2024 வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

8-10-2024 வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் நவராத்திரி நடந்து கொண்டிருக்க கூடிய இந்த சமயத்தில், வளர்பிறை சஷ்டி திதியானது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேற, செல்வ வளத்தில் உயர, உங்கள் கடன் சுமையெல்லாம் குறைய, பண கஷ்டம், மன கஷ்டம் எல்லாம் சரியாக வேண்டும் என்றால் இன்றைய தினம் முருகர் வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.

இன்றைய நாளில் நீங்கள் படிக்க வேண்டிய பாடல் என்ன. செய்ய வேண்டிய வழிபாடு என்ன. தானமாக கொடுக்க வேண்டிய பொருள் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

8-10-2024 வளர்பிறை சஷ்டி

இன்று உங்களுடைய வீட்டில் நீங்கள் படிக்க வேண்டிய பாடல் கந்த சஷ்டி கவசம். முடிந்தவரை ஒரு புத்தகத்தை வைத்து அந்த கந்த சஷ்டி கவசத்தை பார்த்து வாயார மனதார இந்த பாடலை படித்தால், உங்கள் துன்பங்கள் எல்லாம் இன்றே தீர்ந்து, நாளையிலிருந்து உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டும்தான் நடக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

எங்களுக்கு எழுத படிக்கவே தெரியாது என்பவர்கள் இந்த பாடலை ஒலிக்க விட்டு அந்த பாடலுடன் நீங்களும் உங்கள் வாயால் பாடத் தொடங்குங்கள். இன்று உங்கள் வீட்டில் கந்த சஷ்டி கவசம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அடுத்தபடியாக இன்று நெய் சேர்த்த ஒரு சாதத்தை, பிரசாதமாக முருகனுக்கு வைத்து அந்த பிரசாதத்தை ஒரே ஒரு ஏழைக்கு தானம் செய்தாலும் உங்களுக்கு கோடி புண்ணியம். லட்சுமி கடாட்சம் கொண்ட ஒரு பொருள் நெய்.

- Advertisement -

நெய் சேர்த்த பொங்கல் கூட செய்யலாம், வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் எது வேண்டுமென்றாலும் பிரசாதமாக செய்து முருகனுக்கு முன்பாக வைத்து நெய்வேதியம் செய்யணும். வீட்டில் இருப்பவர்கள் அதிலிருந்து கொஞ்சம் சாப்பிடணும் மீதியை கொண்டு போய் அன்னதானம் செய்து விட வேண்டும்.

உங்களுடைய வீட்டில் வேல் வழிபாடு செய்வதாக இருந்தால் அந்த வேலுக்கு இன்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. குறிப்பாக மலை வாழை, மலைத்தேன், பேரிச்சம்பழம் நாட்டு சர்க்கரை, இரண்டு சொட்டு நீ விட்டு பிசைந்து அதை பஞ்சாமிர்தமாக வேலுக்கு அபிஷேகம் செய்தால் உங்களுடைய பணக்கஷ்டம் இன்றோடு சரியாகிவிடும்.

- Advertisement -

அதில் எந்த மாற்றமும் கிடையாது. கடன் சுமையும் படிப்படியாக இன்றிலிருந்து குறைய தொடங்கிவிடும். அதிசக்தி வாய்ந்த இந்த வளர்பிறை சஷ்டி திதியில் மேல் சொன்ன முருகர் வழிபாடு மொத்தமும் எங்களால் செய்ய முடியாது என்றால் ஏதாவது ஒரு வழிபாட்டை செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை கந்த சஷ்டி கவசத்தை மட்டும் ஆவது உங்கள் வாயால் படியுங்கள்.

இதையும் படிக்கலாமே: நவராத்திரி சரஸ்வதி மந்திரம்

அந்த முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு முருகருக்கு அரளி பூ வாங்கி கொடுத்த 6 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், நிறைவான முருகன் அருள் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்